பக்கம்:சரணம் சரணம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுதிய உருவம் 8

தனுக் கரும்பு. - அம்பிகையை வழிபடுகிறவர்கள் எத்தனையோ பேர். பட்சர், கின்னரர். கந்தருவர், வித்தியாதரர், தேவர்கள் எல்லோரும் அம்பிகையின் திருவருளே யாசிக்கிறவர்கள். அந்தப் பெருமாட்டியின் மந்திரங்களை ஜபம் பண்ணுகிற சாதகர்கள் பலர். பைரவர்கள் என்று ஒரு கூட்டத்தினர். அவர்கள் அம்பிகையை வழிபடுகிறவர்கள். மேயான வாசினியது மந்திர சாதகரான பைரவ வேஷதாரிகள்’ என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் எழுதுவார். எஇறைவி பைரவர்களே (தக்க. 429) என்று தக்கயாகப் பரணியிலே வருகிறது.

அவர்கள் அம்பிகையை நள்ளிருளில் வழிபடுவார்கள். சாக்தர்கள் நடுயாமத்தில் சிறப்பான பூஜையைப் புரிவார் கள் எல்லோரும் உறங்கும் நேரத்தில் அவர்கள் விழித் திருந்து அம்பிகையை வழிபடுவார்கள். இதை இந்தப் பக்தர் நினைப்பூட்டுகிறார்

யாமம், வியிரவர் ஏத்தும் பொழுது. சிவபெருமானுக்கே மகாபைரவர் என்பது ஒரு பெயர். அவர் எம்பெருமாட்டியுடன் தனியே இருந்து அவளைப் புகழ்கிற காலம் நள்ளிரவு. மஹாபைரவ பூஜிதா, மார்த் தாண்ட பைரவாராத்யா (லலிதா சகசிர நாமம்,284,785) என்று சிவபெருமாளுகிய பைரவர் அப்பிகையை வழிபடு வதைக் குறிக்கும் நாமங்கள் லலிதா சகசிரநாமத்தில் வரு

கின்றன.

யார் வழிபட்டாலும் பூஜை பண்ணிலுைம் அவளு டைய திருவடியையே லட்சியமாகக் கொள்வார்கள். அந்த அடியே யாவருக்கும் தாபத்திரயங்களைப் போக்கும். நிழலேத் தருவது. அதுவே மோட்ச சாம்ராஜ்யமாக விளங்குவது, பக்தர்களுக்குப் புகலிடமாகவும் பாதுகாப்புத் தரும் அரண்மாகவும் இருப்பது அம்பிகையின் திருவடி. எமக்கு என்று வைத்த சேமம், திருவடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/199&oldid=680580" இலிருந்து மீள்விக்கப்பட்டது