பக்கம்:சரணம் சரணம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுதிய உருவம் #91

ஒன்றாேடு என்று சொல்லிப் பின்பு மற்றவற்றை, இேரண்டு நயனங்களே? என்றார், கமுக் கண்ணியை?’ என்று பின்னும் சொல்வார். அம்பிகைக்கு, த்ரிநயகு, த்ரிலோ சகு, த்ரயம்பகா (லலிதா. 453, 477, 782) என்றுள்ள திருநாமங்கள் அப்பெருமாட்டி மூன்று கண்களை உடைய வள் என்பதைப் புலப்படுத்தும்.

இவ்வாறு அம்பிகையின் திருவுருவத்தைத் தம் உள்ளத் தில் எழுதிக்கொண்ட இவ்வாசிரியர் நாமும் எழுதிக் கொள்ளும்படி பாடுகிருச்.

தாமம் கடம்பு; படைபஞ்ச

பாணம, தனுககருமபு; யாமம் வயிரவர் ஏத்தும் -

பொழுது, எமக் கென்றுவைத்த சேமம் திருவடி; செங்கைகள்

நான்கு; ஒளி செம்மை; அம்மை நாமம் திரிபுரை; ஒன்றாேடு, இரண்டு நயனங்களே. (அபிராமி அம்மையின் மாலே கடம்பு; ஆயுதம் ஐந்து மலரம்புகள்; வில் கரும்பு; அவளுடைய மந்திர சாதகர் கனாகிய வயிரவர்கள் அவளே வழிபடும் நேரம் நடுயாம மாகிய நள்ளிரவு; எம்மை ஆட்கொள்ளும் பொருட்டு வைத்துள்ள பாதுகாப்பு அவள் திருவடி, அவள் செம்மை யான திருக்கரங்கள் நான்கு; அவள் திருமேனியின் ஒளி சிவப்பு; அவளுடைய திருநாமம் திரிபுரை; அவள் திரு விழிகள் ஒன்றாேடு இரண்டாகிய மூன்று. -

தாமம்-மாலே; இது மார்பில் அணிவது, தனு-வில், சேமம்-பாதுகாப்பு. அம்மை என்பதை, தாமம், படை, தனு, திருவடி, செங்கைகள், நயனங்கள் என்பவற்றாேடும் கூட்டுக1

இது அபிராமி அந்தாதியில் 78-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/201&oldid=680583" இலிருந்து மீள்விக்கப்பட்டது