பக்கம்:சரணம் சரணம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 சரணம் சரணம்

அபிராம வல்லி எத்தகைய பெருமையை உடைய வள்? அபிராமிபட்டர் சொல்கிறார். அவளுடைய இன் பத்தை விரும்பி மூன்று கண்களையுடைய பரமசிவமே அவளைத் துதிக்கிறார்,

நயனங்கள் மூன்றுடை நாதனும்.பரவும்

அபிராம வல்லி.

லலிதா சகசி நாமத்தில் மஹாபைரவ பூஜிதா ‘ே என்பது ஒரு திருநாமம். மஹாபைரவர் என்பது சிவபெரு மான் திருநாமம். அப்பெருமான் அம்பிகையைப் பூசிக் கிருராம். சிவாரத்யா(406) என்பது மற்றாெரு திரு நாமம். சிவபெருமானல் ஆராதிக்கப் படுபவள் என்பது அதன் பொருள், சிவபெருமானும் பரவும் பெருமாட்டிஅபிராமி என்றால் அவளுக்கு மிஞ்சித் தெய்வம் ஏது?

வேதம் அம்பிகையின் பெருமையைச் சொல்லித் துதிக்கிறது.

வேதமும். பரவும் அபிராம வல்லி.

வேதத்தால் புகழப்பெறும் பெருமைகளை உடைய வள்’ என்ற பொருகளத் தரும் ச்ருதி ஸம்ஸ்துத வைபவா (929) என்ற திருநாமம் அம்பிகைக்கு உண்டு. வேதந்தான் அம்பிகையின் பெருமையை அறிந்து கூறுகிறது. அதி லிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம். வேதத்தில்ை அறியப்படும் அவளே, வேத வேத்யா என்று லலிதா சகசிர நாமம் கூறுகிறது. அவளே நன்கு அறிந்த வுேதம் அவனைப் பரவுகிறது. அதுமட்டுமா? திருமாலும் புகழ்கிருச்.

நாரணனும்.பரவும் அபிராம வல்லி.

கமலாகூடி நிஷேவிதா (558) என்னும் அம்பிகையின் திருநாமம் இந்தக் கருத்தை உடையது.

மேலிருந்து கீழே படிப்படியாகச் சொல்கிறார், அம்பிகை

யைப் பரவுபவர்கள் இன்னர் இன்னர் என்று. சிவபெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/204&oldid=680586" இலிருந்து மீள்விக்கப்பட்டது