பக்கம்:சரணம் சரணம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் இயல்பு

மான் புகழ்கிறார்; வேதம் பரவுகிறது; நாராயண மூர்த்தி

யும் துதிக்கிறார். இப்படியே சொல்லிக் கொண்டு போக லாம். அதற்கு முடிவு ஏது? மும்மூர்த்திகளும் பரவுகிறார் கள். இரண்டு மூர்த்திகளைச் சொல்லி விட்டார். கடைசி யில் அயனேச் சொல்கிறார். அயனும் அபிராமவல்லியைப் பரவுகிருன் . .

அயனும் பரவும் அபிராம வல்லி.

இவர்களெல்லாம் போற்றுவதை லலிதாம்பிகையின் திருநாமங்களாகிய, ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா (83), ஹரிப்ரஹ்மேந்த்த லேவித (321) என்பவை புலப்படுத்துகின்றன. -

நயனங்கள் மூன்றுடைய நாதன் அம்பிகையைப் பரவி இன்பம் பெறுகிருன். வேதம் அவளேப் புகழ்ந்து பெருமை அடைகிறது. திருமால் அவளைப் போற்றி நலம்பெறு கிருன். பிரமன் அவளே வழிபட்டு ஆற்றல் பெறுகிருன். மும்மூர்த்திகளும் அபிராமியைப் போற்றும் திறத்தை அபிராமிபட்டர்,

‘கமலா லயனும், மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும், துதியுறு சேவடியாய்?? என்று முன்னும் சொன்னர்,

முேதல்தேவர் மூவரும் யாவரும்

போற்றும் முகிழ்நகையே’’ என்று பின்னும் சொல்வார்.

இவ்வாறு மும்மூர்த்திகளாலும் வேதங்களாலும்

போற்றப்பெறும் அபிராமவல்லியின் திருவடிகளையே தாம் அடைய வேண்டிய முடிவான பயன் என்று கொண் உவர்கள் அடியார்கள். . - t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/205&oldid=680587" இலிருந்து மீள்விக்கப்பட்டது