பக்கம்:சரணம் சரணம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.02 சரணம் சரணம்:

உலகத்தை உண்டாக்கிய திருவுந்திக் கமலத்தையும், மனத்தையும் மலரையும் உடைய கூந்தலையும் பெற்ற அபிராமியின் அன்பர்கள் அந்தக் கோலத்தை வழிபட்டு மனத்திலே தியானிக்கிறார் கள்.

மால்வரையும் பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக் கொங்கு இவர் பூங்குழலாள்

திருமேனி குறித்தவரே. அத்தகையவர்கள் பெறும் பயன் என்ன? முதலில் இந்திர பதவியைப் பெற்றுக் கற்பகமரத்தின் நிழலில் தங்கி இன்புறுவார்கள்.

தங்குவர் கற்பக தாருவின் நீழலில் முன்பாட்டிலும், தமனியக் காவினில் தங்குவரே” என்று இந்திர பதவியைக் குறிப்பித்தார். தங்குவதாவது, சில காலம் இருத்தல்; எப்போதும் நிலேயாக இருப்ப தன்று.

பிறகு அவர்கள் அடையும் நிலையைச் சொல்லுகிறார், சகல லோக மாதாவை ஆசிரயித்தவர்களுக்கு மறுபடியும் ஒரு தாய்க்குப் பிள்ளேயாகப் பிறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை22 (31) என்று முன் ஒரு பாட்டில் இந்தக் கருத்தைச் சொன்னர். பற்று அருமல் வினேகளே ஈட்டிக் கொண்டவர்களுக்கு அடுத்தடுத்துப் பிறவிகள் வந்து கொண்டே இருக்கும். கர்மம் உடையவர்கள் தப்பாமல் ஜன்மம் அடைவார்கள். இந்த நியதி வழுவாது. அவ்வாறு வழுவாமல் (தவருமல்). மண்ணில் உண்டாகும் பிறவியை அன்பர்கள் பெறமாட் டார்கள். மற்றவர்களுக்கு முன் விளக்கமாகத் தோன்றும் பிறவித்தொடர் அவர்களுக்கு முன் இராமல் மங்கிப்போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/212&oldid=680595" இலிருந்து மீள்விக்கப்பட்டது