பக்கம்:சரணம் சரணம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கமும் முக்தியும் 203.

விடும், பிறவிகளைத் தம் அளவில் மங்கச் செய்து விடுவார். கள், அம்பிகையின் அன்பர்கள்.

தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாப்

பிறவியை, தாயார் இருந்தால் குழந்தையாகப் பிறக்க வேண்டி வரும்; அககுல் பிறவிகள் அடுத்தடுத்து வந்து நிற்கும், இவர்களுக்கோ தாய்மார் இல்லே, பிறக்க வேண்டிய அவசியம் இல்லாமையால். மற்றவர்களுக்குத் தவருமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பிறவிகள் அவர்கள் மூன் தோன்றாமல் மங்கிவிடும். பிறக்க மாட்டார்கள்: என்பது கருத்து.

தங்குவர் கற்பக தாருவின்

நீழலில், தாயர்இன்றி மங்குவர் மண்ணில் வழுவாப்

பிறவியை, மால்வரையும் பொங்குஉவர் ஆழியும் ஈரேழ்

புவனமும் பூத்தஉந்திக் கொங்குஇவர் பூங்குழ லாள்திரு மேனி குறித்தவரே. (அட்ட குலாசலங்களேயும் மேலே கிளரும் உப்புக் கடல் முதலிய. ஏழு கடல்களேயும் பதின்ைகு புவனங்களே யும் பெற்றெடுத்த திருவயிற்றையும், மணம் பரவியதும் மலரை அணிந்ததுமாகிய கூந்தலேயும் உடைய அபிராமி பம்மையின் அழகிய திருவுருவத்தைத் தியானம் செய்யும் அடியார்கள், இந்திர பதவி பெற்றுக் கற்பக் மரத்தின் நிழலில் வீற்றிருப்பர்; பின்பு பூமியில் பிறந்து இறந்து தப்பாமல் வருகின்ற பிறவித்ை தம்மைப் பெறும் தாய்மார் இல்லாமையாலே மங்கச் செய்வர்.

தங்குவர். சிலகாலம் இருப்பார்கள். தாரு-மரம். கற்பகதாருவின் நீழலில் தங்குவர் என்பது, இந்திர பதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/213&oldid=680596" இலிருந்து மீள்விக்கப்பட்டது