பக்கம்:சரணம் சரணம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சரனம் சரணம்

வருணனே இருக்கும். அந்த வருணனேயில் வரும் திருவுரு வத்தைத் தியானித்துக்கொண்டு அந்த மந்திரத்தை ஜபிக்கவேண்டும். அதுதான் அந்தத் தியான சுலோகத்துக் குப் பயன். அம்பிகையின் திருக்கோல வருணனே வரும் செய்யுட்கள் தியான சுலோகங்களைப்போல உள்ளத்தில் அன்னேயின் வடிவத்தைப் பதித்துக்கொள்ளத் துணையாக இருக்கும். •. “

இப்பேர்து பார்க்கப் போகும் பாட்டு அன்னேயின் உருவ வருணனையைக் கூறுவது; எப்பெருமாட்டியின் இடையையும், மார்பையும், குழலேயும், கண்களையும் பற்றிச் சொல்கிறது. -

பெண்களுக்கு இடை சிறுத்திருப்பது அழகு, கொடி யைப் போன்ற வடிவுடைய அம்பிகையின் இடை மிகச் சிறியது. உரோமக் கொடி தெரிவதைக் கொண்டுதான் அன்னக்கு இடை உள்ளது என்று ஊகிக்க முடிகிறதாம். இப்படி லலிதா சக சிரநாமம் கூறுகிறது. லஷ்ய ரோம லதாதார தாஸ்முன்னேய மத்யமா’ என்பது அதில் வரும் திரு நாமம். அந்த இடையில் செக்கச் செவேலென்ற பட்டுடையை அணிந்திருக்கிருள். அம்பிகையே செந்நிற முடையவள். அவள் திருமேனி வண்ணத்தோடு ஒட்டிய தாக இடையைச் சூழ்ந்து அணி செய்கிறது அந்தப் பட்டுடை. அருணுருனகெளஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதஉ’ என்ற திருநாமம் அந்தச் செம்பட்டுடையைக் குறிக்கிறது. அபிராமிபட்டர் அம்பிகையின் மெல்விய திருவிடையையும் அணிந்த உடையையும் நினைக்கிறார்.

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்.

அம்பிகை இடையில் உடுத்திருப்பதை,

விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் வட்டும்?? (39), ‘ஒல்கு செம்பட்டுடையாளே (84) என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/24&oldid=680600" இலிருந்து மீள்விக்கப்பட்டது