பக்கம்:சரணம் சரணம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறுமையைப் போக்கும் வழி 23:

ஈயென இரத்தல் இழிந்தன்று’’ என்பது புறநானுாறு.

ஒரு வள்ளல் குறிப்பறிந்து ஏழைகளுக்குப் பொருள் வழங்கும்போது அதைப் பெறுவதுகூட இழிவாகாமல் இருக்கலாம். ஆல்ை தாமே ஒருவர் முன் சென்று, நான் இல்லாதவன்’ என்று கைநீட்டி இரப்பது மிகவும் இழிந்த, செயல். :பல்லெலாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில்

கூட்டிச் சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து

. நீட்டி மல்லெலாம் அகல ஒட்டி மானமென் பதனே விட்டி இல்லெலாம் இரத்தல் அந்தோ இழிவிழி வெந்த

- ஞான்றும் என்று குசேலோபாக்கியானத்தில் வருகிறது. -

வறுமையே துன்பத்திற்குக் காணம்; பிறர் தருவதை வாங்கிக் கொள்வது பின்னும் துன்பத்துக்குக் காரணமா கிறது; நாமே வலியச் சென்று ஒருவரிடம் நம் இயலாமை யைச் சொல்லி இரப்பது அளவற்ற துன்பத்துக்கும் பழிக். கும் காரணமாகும். இத்தகைய இழிநிலே வராமல் இருக்க வேண்டுமானுல் எம்பெருமாட்டியைச் சரணுகதி அடை புங்கள் என்றார் அபிராமிபட்டர். - - பிறருக்கு உபதேசம் செய்ய வருகிறவர், தாம் அந்த நெறியில் நின்று காட்டினல் அந்த உபதேசத்துக்கு மதிப்பு உண்டு. இப்படிச் செய்தால் நலம் உண்டாகும் என்று. பிறருக்கு வழிகாட்டுகிறவர்கள், நான் அவ்வாறு செய். தேன்; அதனுல் எனக்கு நன்ம்ை உண்டாயிற்று பாருங் கள்’ என்று சொல்லும் நிலையில் இருந்தால், அவர்கள் காட்டும் வழியை மற்றவர்கள் நம்புவார்கள். அபிராமி, அந்தாதியின் ஆசிரியர் அவ்வாறே சொல்கிறார். நான் அபிராமியம்மையை வழிபட்டு அடிமையானேன்; அதனல் கிருபனர்களிடம் செல்லாமல் வாழ்கிறேன். நீங்களும் அவ்வாறு செய்தால் இரக்கவேண்டிய இழிநிலை உங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/33&oldid=680610" இலிருந்து மீள்விக்கப்பட்டது