பக்கம்:சரணம் சரணம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாருக்குப் Lou 1681? 33.”

ஆகையால் மக்கள் அவளைத் தியானிப்பதல்ை அவர்களுக்குத்தான் நன்மை; அன்னேக்குப் புதிய லாபம் ஏதும். இல்லை. அப்படியே, பிறவிப் பிணியில் சிக்கி உழல்பவர்கள் அவளே வழிபட்டுத் தியானிக்கவில்லே யென்றால் அவர் களுக்குத்தான் நஷ்டம்; வழிபடவும் தியானிக்கவும் வாழ்த்தவும் மனம் மொழி மெய்களேக் கொடுத்து. யாவரும் பணியும் வண்ணம் திருவுருக்கொண்டு கோயில் களில் எழுந்தருளியிருந்தும், அப்பெருமாட்டியை வணங் . காமல், தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் இழப்பு அவர்களுக்குத்தான்; அம்பிகைக்கு அதல்ை கடுகளவும் குறைவு இல்லே. ஆறுகள் வந்து சங்கமிப்பதால் கடல் பெருகுவதில்லை; மேகங்கள் நீரை எடுத்துச் செல்வதல்ை அது குறைவதில்லே. கருனேக் கடலாகிய எம்பெருமாட்டியும் அத்தகையவளே. இதை அபிராமிபட்டர் சொல்கிரு.ர்.

முதல்விதன்னே உன்னது ஒழியினும் உன்னினும்

வேண்டுவது ஒன்று இலேயே. (முதல்வியாகிய அபிராமியை மக்கள் நினையாமல் போனலும் தியானித்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது. ஒன்றும் இல்லே. வேண்டுவது - அவர்களால் கிடைக்க வேண்டுவது; அவர்களால் அவளுக்கு ஆக வேண்டுவது.ே அவளால் உயிர்களுக்கு நன்மை உண்டே ஒழிய உயிர் களால் அவளுக்கு எள்ளளவு பயனும் இல்லே.

‘பொன்னுற்ப்ர யோசனம் பொன்படைத்

தாற்குண்டு; பொன்படைத்தான் தன்னுற்ப்ர யோசனம் பொன்னுக்கங்

கேதுண்டத் தன்மையைப்போல் உன்னுற்ப்ர யோசனம் வேணதெல்

லாமுண்டிங் குன்றனக்கே என்னுற்ப்ர யோசனம் ஏதுண்டு

காண்கச்சி ஏகம்பனே??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/43&oldid=680621" இலிருந்து மீள்விக்கப்பட்டது