பக்கம்:சரணம் சரணம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 எளிமை

பரப்பிரம்மமாகிய பொருள் ஒன்றுதான் உண்மை யோனது. அந்தப் பொருளே பரதேவதையாகிய அம்பிகை. அவளேயன்றி வேறு ஒரு பொருளும் இல்லே. ஆதியில் இருப் பவள் அவளே. தன்னந்தனியான ஏகம் அவள். ஆதலின் ஏகாகிநீ (665) என்றும், அவளேயன்றி இரண்டாவது பொருள் இல்லேயாதலின் த்வைத வர்ஜிதா (668) என்றும் அப்பெருமாட்டிக்குத் திருநாமங்கள் அமைந்தன.

பராசக்தியாய் ஒரே பொருளாய் இலங்கும் எம்பெரு மாட்டி அளவிடற்கரிய் செயல்களைச் செய்து வருகிருள். வெவ்வேறு நிலையில் வெவ்வேறு பெயரும் வடிவமும் கொண்டு பல திருவிளையாடல்களே ஆற்றுகிருள். ஒரு சக்திக் கிருகக்தில் உண்டாகும் மின்சார சக்தி பல பல கிளேக் கம்பிகளின் வழியே சென்று வெவ்வேறு வகையில் விளக்காகவும் விசிறியாகவும் பலவகை யந்திரங்களாகவும் உள்ளவற்றினூடே நின்று இயங்குகிறது. அதுபோல அன்னே பலவேறு வடிவங்களே எடுத்துப் பல பல செயல் களேச் செய்கிருள். அதல்ை பஹாருபா (824) என்ற திருநாமம் உண்டாயிற்று. சக்தி பேதங்கள் பல. மூர்த்தி பேதங்களும் பல. ஆனலும் எல்லாமாக இருக்கிறவள் பராசக்திதான். இந்த உண்மையை அபிராமிபட்டர் 30- ஆம் பாட்டில், ஒன்றே பல உருவே’’ என்று கூறி அம்பிகையைப் பாராட்டினர். மீட்டும் இப்போது அதை நினைக்கிறார்,

பராசக்தியை, யாவையுமாம் ஏகம் (திருக்கேவை வியார், 74) என்று மாணிக்கவாசகர் கூறுவர். முருகனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/45&oldid=680623" இலிருந்து மீள்விக்கப்பட்டது