பக்கம்:சரணம் சரணம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சரணம் சரணம்

இறைவன் சந்நிதி இல்லே. காமாட்சி வீற்றிருந்த திருக் கோலத்தில் விளங்குகிருள். அவளே அரசி ஆதலின் அமர்ந்திருக்கிருள். மற்ற எல்லா மூர்த்திகளும் அப் பெருமாட்டிக்கு அடங்கினவர்களே. இல்லத்தரசியைப் போல அகிலாண்டத்துக்கும் அரசியாக அவள் தன் தலைமை தோன்ற எழுந்தருளியிருக்கிருள். பார்வதியாகச் சிவபிரான் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்பி கையின் நிலை வேறு; ராஜராஜேசுவரியாகத் தனியே வீற்றிருக்கும் நிலை வேறு. அந்த நிலை, அவளே பரதேவதை என்பதைக் காட்டுகிறது. .

காஞ்சிப் புராணத்தில் வரலாறு வருகிறது. சிவபெருமான் இரண்டு நாழி நெல்லேக் கொடுத்து, ‘'வேண்டிய அறங்களைச் செய்’ என்று சொன்னுராம். அம்பிகை, ‘இது எப்படி எல்லா அறங்களையும் செய்யப் போதும்?’ என்று கேட்கவில்லை. அந்த இரண்டு படி நெல்லேக் கொண்டே முப்பத்திரண்டு அறங்களையும் செய்தாளாம்.

‘தொல்லே மறைதேர் துணைவன்பால் யாண்டுவரை எல்லே இருநாழி நெற்கொண்டோர்.மெல்லியலாள் ஒங்குலகில் வாழும் உயிரனைத்தும் ஊட்டுமால் ஏங்கொலிநீர் காஞ்சி யிடை?? (பழைய வேதம் ஆராய்ந்து காண முயலும் சிவபெரு மாளுகிய தன்னுடைய கணவனிடம் ஒராண்டாகிய கால எல்லேயில் இரண்டு படி நெல்லேக்கொண்டு ஒரு மெல்லிய லாகிய பெண், உயர்ந்த உலகத்தில் வாழும் எல்லா உயிர் களேயும், ஒலிக்கின்ற நீரையுடைய காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு, உண்ணுவித்துக் காப்பாற்றிள்ை.)

இது ஒரு பழம் பாடல். . ஒரு வருஷத்துக்கு வேண்டியதைக் கணவன் வாங்கிப் போட அதை வைத்துக்கொண்டே வீட்டுத் தலைவி எல்லா வற்றையும் நடத்துவதுபோலக் காமாட்சியம்மை நடத்தி ளைாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/56&oldid=680635" இலிருந்து மீள்விக்கப்பட்டது