பக்கம்:சரணம் சரணம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னேயின் இயல்பு 67

சாக்தம் என்பது சக்தியை அடையும் சமயநெறி. அதுவே இங்கே அபிராமிபட்டர் கூறும் நெறி. அம்பிகையையே விளித்துச் சொல்வதால் அதை, உன் நெறி’ என்றார். தவ நெறி என்பது தவம் செய்யும் வாழ்க்கை முறையைக் குறிப்பது. நெறியின் இயல்பு தவம்; லட்சியம் அன்னே யோடு ஒன்றுவது, -

இறைவியை அடைவதற்குரிய தவத்தைச் செய்யும் நெறியைக் கடைப்பிடித்தாலன்றி ஆத்மா உய்வுபெற முடியாது. தஞ்சம் என்பது பற்றுக்கோடு. தளர்ச்சி உடையவனுக்குப் பற்றுக்கோடு வேண்டும். சேற்றிலே நிலே தளர்பவனுக்கு உறுதியான பற்றுக்கோடு வேண்டும். மென்மையான கொடியைப்பற்றிப் பயன் இல்லே. முறிந்து போகும் கொம்பைப் பற்றின லும் பயன் இல்லே. உறுதி யான கோல் வேண்டும். பிரபஞ்சச் சேற்றில் அகப்பட்டு நிலே தடுமாறும் உயிருக்கு உறுதியான பற்றுக்கோடு வேண்டும். -

ஏதேதோ தஞ்சம் என்று ஏமாந்துபோன பலரைப் பார்த்து, அவர்கள் பற்றியவை தஞ்சம் அல்ல என்று தெரிந்து கொள்ளவேண்டும். பல பெரியோர்கள் உறுதி யான பற்றுக்கோட்டைக் கைப்பற்றி நலம் பெற்றிருக் .கிரு.ர்கள். அந்த வரலாறுகளே உணர்ந்து பயனுள்ளது இன்னது என்று தெளியவேண்டும். ‘பிறப்பு இறப்புத் துன்பங்களினின்றும் விடுபடுவதற்கு உரிய பற்றுக் கோடாக உள்ள வழி, உன்னே நினைந்து உன் அருளேப் பெறும் பொருட்டுச் செய்யும் தவநெறி என்பதை உணர்ந்து, அந்த நெறியில் என் மனம் பழகும்படி அடியேன் நினைக்கவில்லை! என்கிறார் இவ்வாசிரியர். ‘தஞ்சம் பிறிது இல்லே, ஈது அல்லது என்று

உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்! இவ்வாறு, செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந் தால் நன்மை கிடைக்குமோ? கிடைப்பது. அரிது. இருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/77&oldid=680658" இலிருந்து மீள்விக்கப்பட்டது