பக்கம்:சரணம் சரணம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு வகையான இராகங்களில் நூல் முழுவதையும் பாடி அம்பிகையை வழிபாடு செய்து வருகிறர்கள். நீ ஆதி: சங்கராசாரிய சுவாமிகள் அருளிய செளந்தர்ய லஹரியை இசையுடன் ஒதி இன்பம் கானுவதைப் போல இந்த இருள் நூலேயும் பாடி இன்புறுகிறார்கள். இந்த அந்தாதி யின் நடை மிகவும் தெளிவாக இருப்பதால் எளிதில் மனப் பாடம் செய்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. i திருப்பனந்தாள் காசிமடாலயத்தில் தலைவர்களாக எழுந்தருளியிருந்த ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூலுக்கு உரை எழுதி வெளியிட வேண்டுமென்று பணித்தார்கள். அவ்வாறே எழுதி அதைக் காசிமடத்து வெளியீடாக வெளியிட்டேன். அதற்குமுன் திரு ம. கா. வேற்பிள்ளே அவர்களின் உரை ஒன்றுதான் அபிராமி அந்தாதிக்கு: இருந்தது. இப்போது இந்த நூலுக்குப் பலர் உரை எழுதி யிருக்கிறார்கள். இந்த அருளாளர் திருவாக்கு அன்னேயின் அருளால் பாராயணத்தாலும் இசைப்பாட்டாகப் பாடுவ: தாலும் உரை வகுப்பதாலும் வரவர எங்கும் மிகுதியாகப் பரவிவருவது இன்பத்தைத் தருகிறது. -

அபிராமி அந்தாதி முழுவதுக்கும் பதவுரையாக எழுதிய உரையே முதலில் வெளியாயிற்று. நீ சிருங்கேரி ஜகத்குரு அவர்களின் அருள்ாசியோடு பூநீரங்கத்தில் . சேங்கர கிருபா என்ற மாதப்பத்திரிகை வெளிவரத். தொடங்கியது. அப்போது அதன் ஆசிரியராக இருந்த அமரர் ஸ்ரீ கே. ஆர். வேங்கடராமையரவர்கள் அந்தப் பத்திரிகைக்குத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வர் வேண்டுமென்று பணித்தார். அவர் விருப்பப்படியே சில கட்டுரைகள் எழுதினேன். அப்பால் அபிராமி அந்தாதி யில் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் கட்டுரை வடிவில் விளக்கம் எழுதலாம் என்று தோன்றியது. திருமுறைப் பாடல்கள், கந்தர் அலங்காரப் பாடல்கள் ஆகியவற்றுக் . குக் கட்டுரை வடிவில் விளக்கம் எழுதிப் புத்தகங்களர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/8&oldid=680661" இலிருந்து மீள்விக்கப்பட்டது