பக்கம்:சரணம் சரணம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடி வைக்கும் இடங்கள்

சில சமயங்களில் அம்பிகையின் அருளைப் பூரண மாகப் பெறவில்லையே என்ற ஏக்கம் அபிராமிபட்டருக்கு. உண்டாவது உண்டு. அத்தகைய சமயத்தில் தம்முடைய குறைகளைப் போக்கி அம்பிகை இன்னும் முற்றும் அருள் செய்யவில்லேயே என்று சொல்வார். ஆனல் வேறு சில சமயங்களில் அம்பிகை மிக்க கருனேயினுல் தம்மையும் ஆட்கொண்ட அதிசயத்தைப் பெருமையுடன் சொல்லிக் கொள்வார். முன் பாட்டில் தம்முடைய குறைகளே நினைந்த பட்டர் இப்போது தாம் பெற்ற பேற்றைச் சொல்ல வருகிறார். எம்பெருமாட்டி தம்முடைய தலையின் மேல் திருவடியைப் பதித்தாள் என்று சொல்கிறார்.

அவருடைய தலே நாயின் தலைபோல இழிந்ததாக இருப்பினும் பழைய பெரிய இடங்களில் பழகிய அன்னே யின் திருவடி அந்தத் தலையின்மேல் இருக்கிறதாம். இந்த. ஆச்சரியம் நினேக்க நினைக்க இன்பம் தருகிறது. மற்ற1. இடங்களைக் காட்டிலும் அடியேனுடைய நாய்த்தலே சிறந்: ததோ? என்று அம்பிகையைக் கேட்கிறார், -

எம்பெருமாட்டி தன்னுடைய திருவடியை எங்கெங்கே வைக்கிருள் என்பதை இந்தப் பாட்டில் முதலில் சொல் கிறார்.

அம்பிகையின் வாக்கு மிக இனிமையானது. பேசும்: போதே வீனகானம்போல ஒலிக்கும். அந்தச் சொல்லேக் கேட்டால் நம்முடைய தாபத்திரயங்கள் எல்லாம் போய். விடும். அம்பிகையை மகாமாதாவாக உணர்ந்து குழந்தை. களைப் போலப் பழகுகின்ற பக்தர்களுக்கு அந்தப் பெருமாட்டியின் சொல் பாலைவிட இனியதாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/81&oldid=680663" இலிருந்து மீள்விக்கப்பட்டது