பக்கம்:சரணம் சரணம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84; சரணம் சரணம்,

அவனுக்கு உபகாரம் செய்து அவன் வரலாற்றை விசாரிக் கிருன். அப்போது நான் இன்னருடைய மகன் என்று

சொல்கிருன் ஏழை. அப்படிச் சொன்னவுடன், ‘என்னைக்

கொண்டு என் தந்தையை மதிப்பிடக்கூடாது என்று

அஞ்சி, என் தகப்பனரின் தமையனர் கலெக்டராக இருக்

கிறார்’ என்று சொல்கிருன். அதுபோல, தாயே என்று

எம்பெருமாட்டியைச் சொன்னவர், தம்முடைய தகுதி வின்மையைக் கண்டு தாயை அளவிடப் புகும் மக்களும் இருக்கலாம் என்பதை எண்ணித் தாய்க்குரிய ஏனய உறவுகளேச் சொல்ல வருகிறார். -

“தாயே, நீ எனக்குத் தாயாக இருப்பதால் உனக்குப் பெருமை இல்லை; பிறர் சிறுமையாக நினைக்கக்கூடும். ஆ. இல் உன் பெருமை எனக்குத் தெரியாதா? நீ இமாசல. ளிைன் புத்திரி ஆயிற்றே! பார்வதி அல்லவா?’’

0GT!

“உலகத்தைப் பாதுகாக்கிற தெய்வம் புண்டரீகாட்சன் ஆகிய மகாவிஷ்ணு. அவன் எவ்வளவு பெரியவன்! அவனுக்கு நீ தங்கைச்சி.”

செங்கண்மால் திருத்தங்கைச்சியே!

அவதாரத்தினுலும் பிற உறவுகளிலுைம் உயர்ந்த நிலேயில் இருக்கிற நீ எனக்குத் தாயாக இருக்கிறாய். இவ்வளவு சிறந்த நிலையில் நீ இருந்தாலும் நான் உனக்கு மகன் என்பதைச் சிறிதும் மறவாமல், என் தகுதியின்மை யைப் பொருளாகக் கொள்ளாமல், என்னேயும் பாது காக்க வேண்டுமென்ற பெருங் கருனேயினுல் என்னே ஆட் கொண்டாயே! எத்தகைய பேறு நான் பெற்றேன்!” என்று வியக்கிறர். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/94&oldid=680677" இலிருந்து மீள்விக்கப்பட்டது