பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்களின் மூலம் தகர்த்தெறிந்தார்கள். சமூகத்தின் மனச் சாட்சி என்னும் அனேயும் சுடரைத் தூண்டி விட்டார்கள்.

அன்னு கரீனு’ என்னும் நாவல் உலகப் புகழ் பெற்றது. அதில் வரும் அன்னு யார்? பொருத்தமற்ற விவாகத்தினுல் நல்ல பண்புடைய கணவனைப் பெற்றும் அவனைக் காதலிக்க முடியாமல் ஒரு இளைஞனேடு தட்டை நாடியவள். இளமை மோகம் கசந்து விடவே வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு தற்கொலே செய்து கொண்டவள். வாழ்க்கையின் சமூகவிதி களே மதியாமல், சமூகத்தால் தண்டனை பெற்றவள். அவள் தான் டால்ஸ்டாயின் குணசித்திரங்களில் சிறப்பானவள் என் று உலகமே போற்றுகிறது. -

இனி கேள்விக்கு வருவோம். சிற்றின்ப உணர்ச்சிக்கு இலக் கியத்தில் இடமுண்டா? மற்றெல்லா மனிதப் பண்புகளைப் போல் அதற்கும் இடமுண்டு. பின் ஆபாச இலக்கியம் என் று ஒன்றுமே இல்லையா? இருக்கிறது.

ஆண் பெண் உணர்ச்சியைக் கீழ்த்தரமாக்கி கேலி செய்து குறும்புக்கார சிறுவர்கள் மறைவாக கரியால் சித்திரம் திட்டு கிருர்களே அது போல் ஆண் பெண் உணர்ச்சியையும் உற வையும் மாசுபடுத்திச் சித்தரிப்பது ஆபாசம். இவ்வாறு எழு தும் எழுத்தாளர்கள் உள்ளத்தில் இந்த ஆபாசம் இருக்கிறது. அவர்கள் கற்பின் பாதுகாவலர் என்று நினைத்துக் கொள் கிருர்கள். அவர்களுக்கு கற்பென்பது சமூகம் விதிக்கும் முறை யில் உணர்ச்சியை ஒடுக்கும் மக்கள் மரியாதையாக வாழ் வது. உண்மையை மறக்க வேண்டும், பொய்மையைப் போற்ற வேண்டும். சமூகத்திலிருந்து பிரித்து, மனிதப் பண்புகளே ஒழுக்கமுடையதென்றும், ஒழுக்கமற்ற தென்றும் காட்டி அவற்றின் சமூக அடிப்படைகளே மறைப்பது அவர்களுடைய ممه فنكن نقrقية ؟

ஜெயகாந்தன் கதைகள் அனைத்தையும் நான் படித்ததில்லை. படித்த கதைகளிலிருந்து அவர் தீரமிக்க எழுத்தாளர் என்று:

二 வல்லிக் கண்ணன், 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/103&oldid=561184" இலிருந்து மீள்விக்கப்பட்டது