பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலம் என்ற நாவலின் சுருக்கம் டிசம்பர் இதழில் பிரசுரமா யிற்று. சரஸ்வதியில் 25 பக்கங்கள். அதன் முன்னுரை இது

எமிலி ஸோலா எழுதியுள்ள நாவல்களில் சிறந்தது ஜெர் மினல்’ என்பர் பலர். எர்த் (நிலம்) சிறப்புடையது என் பது சிலர் கருத்து. எடுத்துக் கொண்ட விஷயத்தை நாவ லாக உருவாக்கியுள்ள முறையாலும், குணசித்திரங்களைப் படைத்திருக்கிற திறமையாலும், சோகம், குரூரம், கருனே. நகைச்சுவை, காமம் மனித குணங்களைக் கலந்து கொடுத் துள்ள வகையிலும் இது எமிலி ஸோலாவின் இதர நாவல் களேவிடச் சிறந்து திகழ்கிறது என்பதே என் அபிப்பிராயம்,

அனுபவத்திற்கு ஒவ்வாத கற்பனலங்காரத்தையும் (ரொமான் டிஸிசம்) சமுதாய யதார்த்த வாதத்தையும் (சோஷியல் ரீயலிசம்) கலந்து அற்புத நாவல்களேச் சிருஷ்டித்த பத் தொன்பதாம் நூற்ருண்டுப் பேராசிரியர்களில் முக்கியமானவர் களில் ஸோலாவும் ஒருவன். மத்தியதர வர்க்கத்தினரிடையே மலிந்துள்ள சிறுமைகளையும் குணக் கேடுகளையும் வக்கிரப் பண்புகளையும் அவன் அளவுக்கு அதிகமான தன்மையில் - பூதாகர வடிவில் - மிகுந்த உற்சாகத்தோடு வர்ணித்திருக் கிருன் என்று அநேகர்குறை கூறுவது உண்டு. ஆயினும் அவன் காட்டும் சித்திரங்களில் உண்மை இல்லை என்று எவரும் கூறத் துணிவதில்லை.

மண் மீது மனிதர் கொள்ளும் மோகம் அவர்களே எப்படி எப்படி ஆட்டிப் படைக்கிறது; நிலம் என்னும் நல்லாள் எத்தகைய வேசியாக விளங்குகிருள் என்பதை எல்லாம் அழகாக உணர்ச்சிகரமாக, வர்ணிக்கிறது நிலம்: எனும் நா வல். அதன் பூரண செளந்தர்யத்தையும் சிறு சுருக்கத்தின் மூலம் எடுத்துக் காட்டிவிட முடியாது தான். ஆணுலும் அதன் வனப்பை உணருவதற்கு ஓரளவாவது துணைபுரியும் சாளரம் ஆகும் - வ. க.’’

அந்த இதழில் ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற பகுதி

I வல்லிக் கண்ணன் / 9 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/105&oldid=561186" இலிருந்து மீள்விக்கப்பட்டது