பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிய சிருஷ்டிகளைப் பாருங்கள். கார்க்கி என்ன, டால்ஸ்டாய் என்ன? செக்காவ் என்ன? மாபஸான் என்ன? ஹ்யூகோ என்ன? எமிலி ஸோலா என்ன இன்னும் நமது நாட்டின் முற்போக்கு எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், அப் பாஸ், கிருஷ்ண சந்தர் முதலியவர்கள் என்ன... அவர் களின் எழுத்தையெல்லாம் படித்துப் பார்த்தீர்களா? மனித உணர்ச்சிகளும், மனித வாழ்வும், எதார்த்த நோக்கும் எப் படிப் பரிமளிக்கின்றன! அவர்களைப் போல் எழுத வேண் டாமா? அந்த முயற்சிகளை எல்லாம் நாமும் கைக்கொள்ள வேண்டாமா? ஜெயகாந்தனைப் போல, அபத்த, ஆபாசக் களஞ்சியங்களே சிருஷ்டிக்க இடம் தரலாமா என்றெல்லாம் எழுதினர்கள்; பேசினர்கள்.

நான் மெளனமாய் இருந்தேன். ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி நடந்த வாதப் பிரதி வாதங்களின் போது நான் எப் படி மெளனம் சாதித்தேனே, அதே மெளனத்தை சாதித் தேன்.

என் மெளனத்தைக் கலைக்கும் சந்தர்ப்பத்தை இம்மாதப் புத் தகச் சுருக்கம் எனக்கு அளித்தது குறித்து நண்பர் வல்லிக் கண்ணனுக்கு என் நன்றி!

- இலக்கியத்தில் ஆபாசம் ஆபாசம் எது என்பதைப் பற்றிப் பிறகு வைத்துக் கொள்வோம். இலக்கியத்தில் ஆபா சம் இருக்கலாமா, கூடாதா? ஆபாசம் இல்லாத சந்தியாசி இலக்கியம் உண்டா இல்லையா? சந்நியாசி இலக்கியத்திலா வது ஆபாசம் இல்லாமலிருந்ததா?

இதற்குப் பதிலளிக்க முயற்சிப்போம். இலக்கியத்தில் ஆபா சம் இருக்கலாம். (ஆம்; முற்போக்கு இலக்கியத்திலும் கூட) ஆபாசம் இல்லாதது காற்றடைத்த பையடா’ இலக்கியத் தான். அதிலும் கூட ஆபாசத்தை வெறுக்கும் முறையில் எத் தனையோ ஆபாசங்கள் இருப்பதைக் காணமுடியும்.

ü வல்லிக் கண்ணன் / 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/107&oldid=561188" இலிருந்து மீள்விக்கப்பட்டது