பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று பெயர் பெற்றுள்ள படைப்பாளிகள் இப் பத்திரி கைகளில் எழுதிக்கொண்டு தான் இருந்தார்கள்.

எந்த எழுத்தாளர் ஆணுலும் சரி, அவருடைய ஆற்றல் வளர்

வதற்கும், வெளிப்படுவதற்கும், ரசிகர்களே அடைவதற்கும்: தனி இலக்கியப் பத்திரிகையை மட்டுமே துணை கொண்

டிருந்ததில்லை. எல்லாப் பத்திரிகைகளையும் பயன்படுத்தி வந்திருக்கிருர்கள்,

இன்றும் இதே நிலைதான்.

எழுத்தாளர்களின் ஆற்றல் வளர்ச்சிக்கும், அதன் மூலம் மொழியின்- எழுத்தின்- இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் தங் களால் இயன்றஅளவு உதவிபுரிந்துள்ள சிறுசிறு பத்திரிகை கள் பற்பல, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் தோன்றி, சில காலம் வாழ்ந்து, உயிர்வாழப் போராடி, மடிந்து போயி ருக்கின்றன. அவை லட்சியப் பாதையில், அணில் அளவு சேவை செய்துள்ளன என்று கருதலாமே தவிர: அழுத்தமான முத்திரைகளைப் பதித்திருக்கவில்லை.

படைப்பாளிகள் தங்கள் எழுத்தாற்றலையும் சோதனைத் தின வையும் வெளிப்படுத்திக் கொள்வதற்குப் பெரிதும் துணை புரி கிற ஒரு பத்திரிகை மறைந்து போனல், அந்த இடத்தை நிரப்பி, மேலும் முன்னேற்றம் காண்பதற்கு, வேருெரு சிறு பத்திரிகை தலை தூக்கி விடுகிறது. தமிழ்ப் பத்திரிகை வர லாற்றைக் கவனித்து வந்திருப்பவர்கள் இதை நன்கு உணர்வர்.

பின்னர் எழுத ஆரம்பித்த படைப்பாற்றல் கொண்ட எழுத் தாளர்கள் மணிக்கொடி எழுத்தாளர்களைத் தங்கள் முன் னுேடிகளாக மதித்தார்கள். அதேபோல, லட்சிய வேகத் தோடும் இலக்கிய மோகத்தோடும் பத்திரிகை தொடங்க முற்பட்டவர்கள் மணிக்கொடி’யை முன்மாதிரியாகக் கருதி ஞர்கள்.

墅 வல்லிக் கண்ணன் /5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/11&oldid=561091" இலிருந்து மீள்விக்கப்பட்டது