பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தையா, வில்பாட்டுக் கதைகள் --நா வானமாமலே, ஆறு முக நாவலர் - க.கைலாசபதி, புரட்சிப்புலவர் வடலூரார் -சாமி. சிதம்பரனுர் ஆகிய கட்டுரைகள்;

முச்சந்தி - ஜெயகாந்தன், அகம் -- சுந்தரராமசாமி, குக்கலும் சிக்கலும் - விந்தன், உரிமை-வல்லிக்கண்ணன் ஆகிய கதைகள்;

ரகுநாதனின் காவியப்பரிசு என்னும் கவிதை நாடகம்-- இவை இம்மலரில் இடம் பெற்றிருந்தன.

நல்ல பத்திரிகை எது என்று சிந்தித்து, முடிவு கட்டியிருந்த தி. ஜ. ர. வின் மணியான எண்ணங்களில் சிலவற்றை இத் தொடரில் எடுத்தெழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். -

  • அச்சு தபால். தந்தி, ரெயில், விமானம், போட்டோ, ப்ளாக் செய்தல், கல்வி, அரசியல் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து பத்திரிகைத் தொழிலே இன்று வெகுதூரம் வளர்த்தி ருக்கின்றன. வளர்த்தனவோ, அமுக்கினவோ; வெகுதூரம் வீங்கச் செய்து விட்டன. பலவிதமான பத்திரிகைகள் தோன்றியிருக்கின்றன. பலதரமான நிலைகளில் நடக்கின்றன செய்திப் பத்திரிகைகள், இலக்கியப் பத்திரிகைகள், பொழுது போக்கான பத்திரிகைகள், தொழில் பத்திரிகைகள், அபிப் பிராய விமர்சனப் பத்திரிகைகள், விளம்பரப் பத்திரிகைகள், பிரசார இயக்கப் பத்திரிகைகள், ப்ளாக் மெயில் பத்திரிகை கள் - இப்படி எல்லாம் எத்தனை எத்தனையோ ரகமான தர மான, பத்திரிகைகள் நடக்கின்றன. இப்படிப்பட்ட எண் ணற்ற வகையான பத்திரிகைகளில் எது நல்லது, எது கெட் டது என்று எப்படிச் சொல்ல முடியும்?...

பத்திரிகைத் தொழில் முறையிலும் ജുമേ? பிரமாத

மான- பிரம்மாண்டமான - மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. ஒரு புறம், குடிசைத் தொழில் மாதிரி பல பத்திரிகைகள்

108 / சரஸ்வதி காலம் CD

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/114&oldid=561195" இலிருந்து மீள்விக்கப்பட்டது