பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பத்திரிகைகளிலே அரசியல், கலே, சமூக, இலக்கிய, விஞ்ஞான, பொருளாதார, சமய விஷயங்களும் அபிப்பிராயங் களும் வருவது - விறுவிறுப்பாகக் கூட வருவது - இன்ஸி .ெண்டல் சங்கதி. அதாவது அகஸ்மாத்தாக வந்து ஒட்டிக் கொண்ட அம்சம். சரித்திரபூர்வீகம், காலபோக்கு, அரசியல் பேரம், வியாபாரத் தேவை, கூடிய ஆட்கட்டுப் பாடு இவையெல்லாம் அதற்குக் காரணங்கள் ஆகின்றன. குடிசைத் தொழில் மாதிரி பத்திரிகைகள் நடத்த வருகிற வர்கள் எழுத்துப் பலமும், தெளிவான அச்சுமே தங்கள் உயிர் நாடி என்று கொள்ள வேண்டும்.

சிறு முதலே வைத்துக் கொண்டு ஆரம்பித்து நடத்தக்கூடிய பத்திரிகையே குடிசைத்தொழில் போன்றது. சரஸ்வதி” போன்ற பத்திரிகையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மாதிரி பத்திரிகைகள் நிச்சயமாக அபிப்பிராய சுதந் திரத்தைக் காப்பாற்ற முடியும்; என்னைப் போன்ற எழுத் தாளர்களின் ஊன்றுகோலாக இருக்க முடியும்; எழுதுகிற ஒவ்வொருவருடைய தனித் தன்மையையும் வளர்க்க முடி யும்; புதுப் புது எழுத்தாளர்களைக் கண்டு பிடிக்க முடியும்; புதுமையான எழுத்துப் பரீட்சைகளுக்கு உரிய சூழ்நிலை ஏற்படுத்த முடியும்.

இதற்காக இவை லாபமே அடையக் கூடாது என்ருே இவற்றின் பிரதி விற்பனை அதிகரிக்கவே கூடாது என்ருே நான் சொல்லவில்லை. குடிசைத் தொழில் பொருளும் வியாபார மாகத்தான் வேண்டும். ஆனல் அது, மனித சுதந்திரத் துக்கு ஊறு செய்யாத வியாபாரம்: மனிதனை ஒரு ஜீவனுக எண்ணுமல் பெரிய யந்திரம் ஒன்றின் உறுப்பாகச் செய்யும் பெருந் தொழில் போலல்லாது, மனிதத் தன்மையைப் பாது காப்பது குடிசைத் தொழில். இலக்கியமோ விஞ்ஞானமோ, வேறு துறையோ, எதிலும் இந்த மாதிரிக் குடிசைத்தொழில் பத்திரிகைகளுக்கு இடம் உண்டு .

எது எழுத்தாளர்களின் உரிமையைக் காப்பாற்றுகிறதோ,

110 சரஸ்வதி காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/116&oldid=561197" இலிருந்து மீள்விக்கப்பட்டது