பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யர் ஏற்பதோடு, எனது ஆசையான இவ்வேண்டுகோளத் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க இதை வெளியிடவும் வேண்டு கிறேன்’ என்று முருகானந்தம் எழுதியிருந்தார்.

சரஸ்வதி'யின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருந்த வாச கர்களில் சென்னை 21, சோலேயப்பன் தெருவைச் சேர்ந்த மு. ரா. சீனிவாசனும் ஒருவர். அவர் அவ்வப்போது சந்தாக் கள் சேர்த்து உதவி, உற்சாகமூட்டும் கடிதங்களும் எழுதி வந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் (இது வரை அவர் சரஸ்வ திக்கு 11 சந்தாதாரர்களை சேர்த்திருந்தார்) வளர்ச்சி திதிக்கு ரூ 9 வசூல் செய்து அனுப்பியதோடு, ஒரு நீண்ட கடித மும் எழுதியிருந்தார்.

"மிக உயர்ந்த ரகக் கடிதத்தில் அச்சடிக்கப்பெறுவதோ, கண்கவர் அரை நிர்வான கலர் சித்திரங்கள் தாங்குவதோ, சுய விளம்பர மாமேதைகளின் விஷயதானம் பெறுவது மட் டுமோ ஒரு பத்திரிகையின் குறிக்கோளாகமுடியாது....

சரஸ்வதியின் வளர்ச்சிக்கான அவசியத்தை ஆராயும் முன், கடந்த கால முற்போக்கு இதழ்கள் சிலவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். நீ வை. கோ-வின் சக்தி, கே. ஸி. எஸ். வலின் மாதமணி, நீதி, குயிலனின் முன்னணி, வாரம், மாஜினியின் தமிழன், ரகுநாதனின் சாந்தி, இவை யாவும் தொடர்ந்து நடைபெருமற் போனதின் காரணம் என்ன? பத்திரிகை நடத்தும் திறமையற்றதாலா? தகுந்த விஷயதானம் செய்பவரில்லாமலா? அல்லவே அல்ல. வாச கர்களின் அசிரத்தை என்பதே என் துணிவு. இனியும் நாம் சென்ற கால நடைமுறையிலே சென்று கொண்டிருப்போமா ல்ை நம் வாழ்நாளிலே பெரியதொரு தவறிழைத்தவர்களா வோம். கால மாற்றத்திற்கேற்ப நம் செயல் முறைகளையும் மாற்றியாக வேண்டும். மிகத்தொன்மையான நாகரீகம் படைத்தது நம் பாரதம் என்ருே, தமிழ் உலக மொழிகளில் சிறந்தது என்ற ஆராய்ச்சியிலோ மட்டும் கவனம் செலுத்திக்

வல்லிக் அண்ணன் 113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/119&oldid=561200" இலிருந்து மீள்விக்கப்பட்டது