பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அப்படி தாங்கள் போதிப்பது கிடையாது. பார்ப்பது தப்பு என்றும் நாங்கள் சொல்லவில்லே. அழகிகளேயும் அலங்காரி களையும் தன் ருகப் பார்த்து ரசியுங்கள்; பார்க்கவும் பார்க்கப் படவும் அவர்களும் தயாராக இருக்கிருர்கள் என்று எடுத்துச் சொல்லவும் நாங்கள் தயங்கவில்லே. பார்ப்பதளுல், பார்க்கிறவர்களுக்கும் பார்க்கப்படுகிறவர்களுக்கும் சந்தோ ஷமே கிடைக்கிறது என்று பல தடவைகள் எழுதியும் இருக்கிருேம்’ என்று நான் சொன்னேன்.

அவர், செச் சே எழுதுவது சரியல்ல. அது குட் மேனர்ஸ் ஆகாது அல்லவா!' என்ருச்.

மக்களின் உண்மையான ரசனையை நன்கு புரிந்து கொண்டு வெற்றிகரமான முறையில் பத்திரிகைக்குத் துரித வளர்ச்சி உண்டாக்கிய பெருமை லட்சுமிகாந்தனுக்கு உண்டு. 194445-ல் சினிமா தூது’ என்ற பத்திரிகை மூலம் பெரும் பர பரப்பு உண்டாக்கியவர் இவர். அன்று பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்களே அம்பலப்படுத்தி, மக்களின் அறியும் அவாவுக்கு இனிய தினி கொடுத்தவர். பின்னர் கொலை செய்யப்பட்டார். மக்க ளின் மனுேபாவத்தை நன்ருக ஸ்டடி பண்ணி, பத்திரி கையை ‘மக்களின் முற்போக்கு இதழ் ஆகவும் வியாபார வெற்றியாகவும் வளர்த்து விட்ட பெருமை ஆதித்தனுக்கு உண்டு. மக்களின் ருசிகளே சரியாகப் புரிந்து கொண்டு, தாழ்ந்து போகாமலும். உயர்ந்து விடாமலும் எல்லேக்கோட் டிலே நின்றபடி வெற்றியிடுக்கோடு வளர்ந்து வரும் பெருமை *குமுதம்' பத்திரிகைக்கு உண்டு. ஆதித்தன் பத்திரிகை களும் குமுதம் ஏடும் வெற்றிகரமாக வளர்ந்துள்ளதற்குப் பணய்லமும் முக்கியமாக இருந்திருக்கிறது. அமெரிக்க முறைப் பிரச்சார உத்திகளே அவற்றின் அதிபர்கள் கையாண்டு வருவதும் ஒரு காரணம் தான். இலக்கியப் பத்திரிகைகள் தோல்வியாக முடிந்திருப்பதற்கு, போதுமான பணபலம் இல்லாமல் போனதே அடிப்படைக் காரணமாகும் என்று நான் கூறினேன்.

115 / சரஸ்வதி காலம் ü

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/122&oldid=561203" இலிருந்து மீள்விக்கப்பட்டது