பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*இதனுல் எல்லாம் நாம் சோர்வு அடைய வேண்டியதில்லை. நம் எண்ணங்களே மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். நமது பத்திரிகையை மக்கள் மத்தியில் பரப்பத் தீவிர முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்’ என்று வக்கீல் நண் பர் குறிப்பிட்டார். இலக்கியத்தையும் ஒரு இயக்கமாக வளர்த்துப் பரப்ப வேண்டும். இந்தக் கருத்து அடிக்கடி எடுத்துச் சொல்லப் பட்டுள்ளது. 1964ல் க. நா. சுப்பிரமணியம் இலக்கிய வட் டம் என்ற மாதம் இரு முறை நடத்திய போது இலக்கி யத்துக்கு என்று ஒரு இயக்கம் தேவை என்று அவர் திரும்பத் திரும்ப எழுதினர். அந்த கருத்தை ஆதரித்து *இலக்கிய வட்டம் இதழ்களில் கட்டுரையை எழுதிய நான் அப்போதே குறிப்பிட்டிருந்தேன்; இலக்கியம் இயக்க ரீதி யில் பரப்பப்பட வேண்டும் என்று 1940 களிலும் 1950 களி லும் நான் அநேக நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதியது உண்டு. 1969-ல் ‘கண்ணதாசன்' என்ற இலக்கிய மாசிகை அருமை யான மலர் ஒன்று தயாரித்திருந்தது. அவ்வருடம் இறந்து போன இந்தியக் கவிஞர் மக்தூம் பற்றி கிஷன்சந்தர் எழுதிய உணர்ச்சி மயமான நல்ல கட்டுரை ஒன்றும் அதில் இடம் பெற்றிருந்தது முன்னதாக இந்த நாட்டை வேரோடு குலுக்க வேண்டும் என்று மக்தூம் சொன்னர். அவரும் அவரைப் போலவே ஊக்கம், உற்சாகம், ஆற்றல், உழைப்பு கொண்ட முப்பது படைப்பாளிகளும் ஒன்று கூடி வட இந்தியாவில் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டது பற்றி கிஷன் சந்தர் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் நாடு நெடுகிலும் உற்சாகத்தோடு சுற்றித் திரிந்து முக்கிய நகரங்களிலும் பலப் பல ஊர்களிலும் முகாமிட்டு, ரசிகர்களைக் கூட்டி, தங்கள் படைப்புகளே அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டினுர்கள். இதைப் படித்த போதும் நண்பர்கள் சிலருக்கு, தமிழ் நாட் டிலும் அத்தகைய இலக்கிய இயக்கம் நடத்தியாக வேண் டியதன் அவசியம் குறித்துக் கடிதங்கள் எழுதினேன்.

ü வல்விக்கண்ணன் / 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/123&oldid=561204" இலிருந்து மீள்விக்கப்பட்டது