பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காகிதத்தால் செய்யப்பட்ட இலைகளில் வாயை வைத்து, கடித்த பின்பே காகிதம் என்று கண்டு கொண்ட ஆட்டுக் குட்டியைப் போல், அனுபவங்களின் மூலமே நான் அறி வைச் சேகரித்திருக்கிறேன்’ என்றும், இன்னும் உணர்ச்சி யோடும் உருக்கமாகவும் நினைத்துப் பார்த்தேன்' என்ருெரு சொற்சித்திரம் தீட்டியிருந்தார் கவிஞர் கண்ணதாசன், அம் மலரில். அவருக்கும் விரிவான ஒரு கடிதம் நான் எழுதியது உண்டு. கவி மக்தூம் கூறியது, போல இந்த நாடு வேரோடு குலுக்கப்பட வேண்டும்'; அதற்கான இலக்கிய இயக்கம் தேவை என்பது குறித்துத்தான். -

உயர்ந்த இலக்கியங்களையும், தரமுள்ள படைப்புகளையும் வரவேற்று, ரசித்து, நினேத்து நினைத்துப் பேசி மகிழும் இயல்புடைய ரசிகர்கள் நாடு நெடுகிலும் இருக்கிருர்கள். ஆங்காங்கே சிதறிக் கிடக்கிருர்கள். எதிர்பார்க்க முடியாத இடத்தில் எல்லாம் - போக்குவரத்து வசதியாக அமையாத சிறுசிறு கிராமங்களில் கூட - இருக்கிருர்கள். அவர்களோடு

தொடர்பு கொள்வதற்கு இத்தகைய இயக்கம் உதவிபுரியும்.

முன்காலத்தில், நாவலாசிரியன் சார்லஸ் டிக்கன்ஸ் தனது படைப்புகளைப் பரப்புவதற்காக ஊர் ஊராகச் சுற்றி, தன் நாவல்களிலிருந்து சுவையான பகுதிகளே, நாடகத் தன்மை யோடு, வாசித்துக் காட்டினன் என்பது வரலாறு. வேறு சில படைப்பாளிகளும் அவ்விதமே செய்திருக்கிருர்கள். ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ரஷ்யாவிலும் ரொம்ப காலமாக இப்படி நடந்து வருகிறது. கலைஞர்களும் படைப் பாளிகளும் நகரங்களின் பொது மண்டபங்களிலும், சிற்றுார் களின் தெருக்களிலும் நின்று கவிதை, நாவல், நாடகங்களே வாசித்துக்காட்டி ரசிகர்களேத் திரட்டும் பணியில் ஈடுபடுவது குறித்துச் செய்திகளும் கட்டுரைகளும் மிகுதியாகவே வந் துள்ளன. -

தமிழ் நாட்டில் 1960களிலும் பின்னரும் வாசகர்களிடையே

118 / சரஸ்வதி காலம் 毽

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/124&oldid=561205" இலிருந்து மீள்விக்கப்பட்டது