பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஷ்ணன் எழுதிய தமிழகத்தில் திருமணம். தோட்டியின் மகன் தகழி சிவசங்கரம்பிள்ளையின் மலையாள நாவலே சுந்தர ராமசாமி (என். எஸ். ஆர். தமிழாக்கியது. ஆர். கார்த்தி கேயன் எழுதிய சதுரங்கம் (விளையாட்டுப் பயிற்சி), நா. வானமாமலை எம். ஏ. எல். டி.யின் வில்பாட்டுக் கதைகள்; ஜே. எம். கல்யாணம் எழுதிய போட்டோ எடுக்கலாம் வாருங்கள். இவை இதழ்கள் தோறும் வந்து கொண்டிருந்த ‘தொடர்கள்.

நிமாய்கோஷ் எழுதிய சினிமாவின் கதையும், அ. நடரா சன் எழுதிய விஞ்ஞான உலகம் கட்டுரைகளும் அவ்வப் போது பிரசுரமாயின.

ஒவ்வொரு இதழிலும் சாமி சிதம்பரனர் கட்டுரையும், ஜெய காந்தன், வல்லிக் கண்ணன் கதைகளும் இடம் பெற்றன. டி, செல்வராஜ், வேந்தன், கு. சின்னப்ப பாரதி முதலியோரின் கதைகள் அடிக்கடி வெளிவந்தன. திருச்சிற்றம்பலக்கவிரா யர் அதிகம் கவிதைகள் அருளினர். புத்தக விமர்சனம்’ இதழ் தோறும் இருந்தது. பெரும்பாலான புத்தகங்களுக்கு நான்தான் மதிப்புரை எழுதிக் கொண்டிருந்தேன். இலக்கிய உலகப் பெரியவர்களேப் பற்றிய சுவையான வரலாற்றுச் செய்திகள் ரசமான துணுக்குகள் ஒரு பக்கக் கதைகள், போன்றவற்றையும் நான் எழுதி வந்தேன்.

இவை போக, நாலாவது ஆண்டில் புதுமைகள் எனக் குறிப் பிடப்பெற வேண்டியவை

டாக்டர் கமில் ஸ்வெலபில ரகுநாதன் பேட்டி கண்டு, ஏப்ரல் இதழில் கமிலச் சந்தித்தோம் என்று ஒரு விசேஷக் கட்டுரை எழுதியிருந்தார். அந்த இதழின் அட்டையில் கமில் ஸ்வெலபில் படம் இடம் பெற்றிருந்தது.

மே இதழ் முதல் அட்டையில் எழுத்தாளர் படம் பிரசுரிக் கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. நமது எழுத்தாளர் வாசை என்று, அந்தந்த எழுத்தாளர் பற்றி ஒரு பக்கம்

122/சரஸ்வதி காலம் 翅

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/128&oldid=561209" இலிருந்து மீள்விக்கப்பட்டது