பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்குப் பிறகு, சரஸ்வதி மாதம் இரு முறைப் பத்திரிகையாக மாற்றப்பட்டது. மலர் ஐந்தின் முத லாவது இதழ் 20-1-1958 அன்று வெளியாயிற்று. அதன் ஆசிரியர் குறிப்பு முக்கியமானதாகும்.

‘வாழ்வோம்; வளர்வோம்!” என்ற தலைப்பில் விஜயபாஸ்கரன் இவ்வாறு எழுதியிருந்தார். - -

"இந்த இதழ் தொட்டு சரஸ்வதி மாதம் இருமுறையாகி விட்டது. நமது நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறு கிறது. ஆமாம். கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் பத்திரி கையைத் தவருது கொண்டு வந்து விட்டோம். விளம்பர பலம், விற்பனை பலம் எதுவும் போதுமான அளவுக்கு இல் லாமல், நாளுக்குநாள் கார்க்கோடக விஷம் போல் ஏறிக் கொண்டு செல்லும் காகித விலக்கு மத்தியில், சரஸ்வதி போன்ற ஒரு லட்சியப் பத்திரிகை தொடர்ந்து தடைமுடை யின்றி வெளிவந்ததோடு மட்டுமல்லாமல், இன்று மாதம் இரு முறையாகவும் வளர்கிறது என்ருல், அது மகிழ்ச்சிக் குரிய செய்தி தானே. சரஸ்வதி இன்று நின்றுவிடும், நாளே நின்றுவிடும் என்றெல்லாம் அந்தரங்கமாகவும் மனப்பால் குடித்து வந்தவர்களின் வாயடைத்துப் போகும் விதத்தில் வாழ்ந்தே விட்டது. இன்று வளர்த்தே விட்டது. வளர்ந்து உங்கள் இதயக் கழனியிலே வேரூன்றி நிலத்தும் விட்டது!

மாதமிருமுறை யாகும் இதே நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச் சிக்குரிய மற்ருெரு செய்தியும் காத்திருக்கிறது. இந்த இதழி லிருந்து சரஸ்வதியின் இலக்கிய வளர்ச்சிப் பணியை மேலும் மேம்படுத்த சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு ஆசிரி யர் குழுவும் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் திருவாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ரகுநாதன். சுந்தர ராமசாமி, ஆர். கே. கண்ணன் முதலிய நால்வரும், நானும் இருக்கிருேம். இவர்கள் எல்லோருமே உங்கள் அபிமான எழுத்தாளர்கள். உங்களுக்கோ தமிழ் இலக்கிய உலகுக்கோ இவர்கள் புதியவர்கள் அல்ல. எனவே இவர்களே நாம் உங்

125 / சரஸ்வதி காலம் 瓯

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/132&oldid=561214" இலிருந்து மீள்விக்கப்பட்டது