பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து விடக் கூடாது' என்றும் விரும்பினுர். (இது ஆரம் பத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ) என்ருலும், தனது பத்திரிகையை அவர் ஜனசக்தி அச்சகத்திலேயே அச்சிட்டு வந்தார். வேறு பிரஸில் அச்சடிப்பதை விட, ஜனசக்தி பிர ஸில் பத்திரிகையை அச்சிட்டால், அந்தப் பணம் கட்சி நலனுக்குப் பயன்படுமே என்ற நல்லெண்ணம் தான் காரணம். ஜனசக்தி வெளியீட்டில் அதிக அக்கறையோ டிருந்த கட்சி நண்பர்கள் சிலரின் யோசனையும் இதற்குக் காரணமாகும். -

அப்போது சரஸ்வதி 5000 முதல் 6000 பிரதிகள் வரை அச்சாகி வந்தது. கட்சி அபிமானி ஒருவர் நடத்துகிற இலக்கியப் பத்திரிகையை இவ்வளவு சிறப்பாக வளர்கிறதே என்று கட்சித் தலைமையும், கட்சி நலனில் ஆர்வம் உடை யோரும் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும், அது தான் நியாயம்.

அளுல் இங்கோ நிலைமை நேர் மாருக இருந்தது. கட்சிப் பத்திரிகையான ஜனசக்தி ஒரே சீராக, வெற்றிகரமாக, அவர் களால் நடத்த இயலவில்லை. இது வரலாற்று உண்மை ஆகும். அவ்வப்போது முற்போக்கு இலக்கியப் பத்திரிகை என்றும், அரசியல் தத்துவப் பத்திரிகை என்றும் தலைவர் ஜீவானந்தம் கட்சி ரீதியில் புதிய புதிய முயற்சிகளே ஆரம் பித்து, வெற்றிகாண முடியாமல் நிறுத்தி விட்டதும் வரலாறு தான். ஆகவே, தனி ஆள் ஒருவர் இவ்வளவு வெற்றிகர மாக முற்போக்கு இலக்கியப் பத்திரிகை ஒன்றை நடத்து வது அவருக்கு பிடிக்கவில்லை. விஜயபாஸ்கரன் வார்த்தை களில் சொல்வதானுல், ஜீவாவுக்கு முற்போக்கு இலக்கியப் பத்திரிகை என்ருல் அதை நாம் தானே நடத்த வேண்டும் என்று நினைத்தார் போலும்!"

கட்சி அபிமானி ஒருவர், கட்சியின் கொள்கைகளுக்கும் நோக்கங்களுக்கும் நல்லது செய்யும் முறையிலேயே, வெற்றி கரமாக ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்தும்போது கட்சித்

{T} வல்லிக்கண்ணன் / 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/135&oldid=561217" இலிருந்து மீள்விக்கப்பட்டது