பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியம் எதுவுமில்லை என்ற தன்மையில், ஜனசக்தி' யிலே யே கட்டம் கட்டி ஒரு அறிவிப்பு விடுத்தார் தலைவர் ஜீவா னந்தம். உடனடியாக பத்திரிகை விற்பனை பாதிக்கப்பட்டது மட்டுமல்ல. கட்சி நலனில் அக்கறை கொண்ட தோழர்கள் தனி ஆள் நடத்திய பத்திரிகையின் விற்பனைப் பணத்தைக் கூட அனுப்பி வைக்காமல் தங்கள் கட்சிப்பற்றுதலே நிலை நாட்டி விட்டார்கள்!

சரஸ்வதி வரலாற்றில் நிகழத் தொடங்கிய நிகழ்ச்சியும் அது தான். எனவே, கட்சி நலனில் ஆர்வமும், கம்யூனிசக் கொள் கைகளில் தீவிர ஈடுபாடும் கொண்ட எழுத்தாளர்களே "ஆசிரியர் குழு’ என்ருக்கிளுல், பத்திரிகைக்கு ஆதரவாளர் கள் குறையாமல் இருப்பார்கள் என்று விஜயபாஸ்கரன் எண்ணினர். வேறு சிலரும் இந்த யோசனையை ஆதரிக்கக் கூடும்.

பத்திரிகையின் தரம் உயர்வதற்கு இந்த ஏற்பாடு எவ்வகை யிலும் பலன் அளித்து விடவில்லை. ஆசிரியர் குழு’ என்று விளம்பரப்படுத்தபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட எழுத்தா ளர்கள். கொஞ்ச காலத்துக்கு, அதிகமாய் எழுதி உதவிஞர் கள். விஜயபாஸ்கரன் தான் ஆசிரியப் பொறுப்பு முழுவ தையும் கவனித்து வந்தார். வழக்கமாக ஒத்துழைக்கும் நண்பர்கள் இடையருது தங்கள் தொண்டினைச் செய்து கொண்டுதானிருந்தார்கள்.

சரஸ்வதி'யின் வளர்ச்சிக்கு மேலும் இடைஞ்சல் செய்யும் விதத்தில், ஜீவானந்தம் கட்சியிலிருந்து ஒரு இலக்கியப் பத்திரிகை தொடங்கத் திட்டமிட்டார். மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற்று குறுகிய காலத்தில் வேக வளர்ச்சி பெற்று விட்ட குமுதம்' பத்திரிகையின் பெயர் அத் தலை வரை வசீகரித்தது. தாம் தொடங்கும் இலக்கியப் பத்திரி கைக்கு அப்படி ஒரு பெயர் வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டார். தாமரை” என்ற பெயரைத் தேர்ந்து கொண்டார். "முற்போக்கு இலக்கிய ஏடு” ஆன தாமரை வெளி வரத்

口 வல்லிக்கண்ணன் 131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/137&oldid=561219" இலிருந்து மீள்விக்கப்பட்டது