பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடங்கியதும், ஜனசக்தி அச்சகத்தில் சரஸ்வதி அலுவல் கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. எப்பொழுதும், தாமரை வேலைகளுக்குத் தான் முதலிடம் என்ற நிலைமை ஏற்பட் டது. தாமரை சொந்தப் பத்திரிகை- கட்சிப் பத்திரிகை; சரஸ்வதி வெளி ஆள் பத்திரிகை என்ற நிலையும் தானுகவே ஏற்பட்டு விட்டது.

  • சரஸ்வதி மாதம் இருமுறையின் முதல் இதழில் (20.9-58) இலங்கை எழுத்தாளர் எச். எம். பி. முஹிதீன் படம் அட் டைப் படமாக விளங்கியது. (அக்டோபர் 10-ம் தேதி இத ழில் மகாத்மா காந்தி படம்.) 25-10-58 இதழ் அட்டையில் ஜெயகாந்தன் படம். நவம்பர் 10 இதழில் டொமினிக் ஜீவா 25-ம் தேதி இதழில் கே. இராமநாதன், டிசம்பர் 10-ல் கே. டானியல் 25-ல் நா. வானமாமலை ஆகியோரின் படங்கள் பிரசுரமாயின. 'நமது எழுத்தாளர் வரிசை என்று அறிமுகம் செய்யும் இம்முயற்சி அத்துடன் முடிந்து போயிற்று.
  • மாதம் இருமுறை'யின் முதல் இதழிலிருந்து சுவாரஸ்யமான ஒரு புதிய அம்சம் தொடரலாயிற்று. சென்னைக்கு வந்தேன்' என்ற கட்டுரை வரிசைதான் அது.

எழுத்தாளர்கள் பலர் சென்னையை தங்கள் வாசஸ்தலமாகக் கொண்டிருக்கின்றனர். பல ஊர்களில் பிறந்து வளர்ந்தவர் கள் சென்னையில் எழுத்தாளராகக் குடியேறி இலக்கிய சேவை செய்து வருகின்றனர். எழுத்துலகில் புகுவதற்காக சென்னை வந்த போது என்னென்ன அனுபவங்கள் இவர் களுக்குக் கிடைத்தன என்று அறிவது ரசமாக இருக்கும். இலக்கிய உலகத்தின் வளர்ச்சிப்போக்குகளையும் புரிந்து கொள்ள முடியும். இந்த நோக்கத்தோடு இந்தப் புதிய பகு தியைத் துவக்கியிருக்கிருேம் என்று ஆசிரியர் குறிப்புடன், “நினைவு அலைகள்’ எனும் பொதுத் தலைப்பில் இவ்வரிசை ஆரம்பமாயிற்று.

சி. சு. செல்லப்பா, க. நா. சுப்ரமண்யம், வல்லிக்கண்ணன்,

132 சரஸ்வதி காலம் 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/138&oldid=561220" இலிருந்து மீள்விக்கப்பட்டது