பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிப்பு ஏஜண்டுகளின் நிலையை பெரிதும் பாதித்து விட் டது. சரஸ்வதி ஏஜண்டுகள்தான் தாமரைக்கும் ஏஜண்டுகள் என்ற நிலையில், அதே எழுத்தாளர்கள் எழுதும் தாமரை மலர் எட்டணுவுக்குக் கிடைக்கும் என்கிறபோது, சரஸ்வதி மலரை ஒரு ரூபாய் கொடுத்து ரொம்பப்பேர் வாங்கமாட்டார் கள். வாங்குவோர் தயங்குகிருர்கள் என்று கூறி முன்பு 500 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் இப்போது 250 பிரதி கள் போதும் என்று எழுத ஆரம்பித்தார்கள். இப்படியே எல்லோரும் ஆர்டரைக் குறைத்தார்கள். அச்சகத்தில் சரஸ் வதி மலரை வேண்டுமென்றே தாமதம் செய்து மறுமாதம் 15 தேதி வரைகூட வெளியிட முடியாதபடி ஆக்கிவிட்டார் கள். இதனுல் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. நான்காண்டு களில் சரஸ்வதியிஞல் ஏற்பட்ட மொத்த நட்டத்தில் பாதி ஒரு மலரிலேயே ஏற்பட்டு விட்டது.'

என்ருலும், சரஸ்வதி ஆண்டு மலர் (1959) ஆகச் சிறந்த தயாரிப்பாக’-அருமையான இலக்கியக் களஞ்சியமாக-விளங் கியது. 200 பக்கங்கள், அவ்வளவும் விஷயங்கள். படங்கள் கிடையாது, விளம்பரங்கள் இல்லை. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகம், நாவல் எல்லாம் இனிக்கும் இலக் கியப் படையலாக இருந்தன.

வாசக நண்பர்களுக்கு என்று தலைப்பிட்டு விஜயபாஸ்கரன் ஐந்து பக்கங்கள் எழுதியிருந்தார். -

'சில விஷயங்களே உங்களுடன் இதயம் திறந்து பேச வேண்டுமென்று எனக்கு வெகு நாட்களாகவே ஆசை, இன்று நிர்ப்பந்தவசமாய் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. மகிழ் றேன். நிமிர்ந்தவன்தான் நிமிர்ந்த விஷயங்களை பார்க்க முடியும்! குனிந்து கிடப்பவனிடம் சென்று அதோ, மலே தெரிகிறது பார் என்று நிமிர்ந்தவன் கூறுவதுதானே அழகு? கடமை? குனிந்தா பார்க்கிருன், அதுவும் சரிதான்’ என்று நிமிர்ந்த வனும் குனிந்துகொள்வது விவேகமா? -

芷 வல்லிக் கண்ணன் 137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/143&oldid=561225" இலிருந்து மீள்விக்கப்பட்டது