பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரே விஷயத்திற்கு வருவோமா? அதற்கு முன் தற்புகழ்ச் சியோ, தன்னகங்காரமோ, தலைக்கணமோ ஏதுமில்லாமல் - இதயம் திறந்து பேசுவதனல் - நான் ஒரு விஷயத்தைக் கூறிவிடத்தான் வேண்டும்.

நமது பத்திரிகை - தமிழ் நாட்டில் இன்று வரை வெளிவரும் எந்த இலக்கியப் பத்திரிகையையும்விட, தரம் குறையாத முறையில், முற்போக்காய், புதுமையாய், நலமாய், நல்வழி யாய் இலக்கியப் பணிபுரிந்து வருகிறது. ஆம். சரஸ்வதி ஒன்றே தமிழ்நாட்டில் வியாபாரப் பார்வையில்லாமல், விளம் பரப் போர்வையில் வெத்துவேட்டு ஆர்ப்பாட்டங்கள் எதுவு மில்லாமல், எளிமையாக இருந்து ஏற்றமான பணிபுரிந்து வருகிறது. இது நான் சொல்லுவது மட்டுமல்ல; நீங்களும் சொல்லுகிறீர்கள்; தமிழ்நாட்டில் உள்ள நமது வாசகர்கள் அனவரும் சொல்லுகிருர்கள். பிற நாட்டிலுள்ள தமிழறிந்த வாசகர்களும், அறிஞர்களும் இதையேதான் சொல்லுகிருர்கள்.

'திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ருர் மகாகவி பாரதியார். பாரதி கூறிய இந்த இலக்கணத்துக்கு நூற்றுக்கு நூறு ஏற்றவகை யிலுள்ள தமிழ் இலக்கியப் பத்திரிகை சரஸ்வதி ஒன்றுதான் என்பதைப் பலரும் கூறக்கேட்டு நான் மிகவும் மகிழ்வெய்து கிறேன். செக்கோஸ்லேவேகிய, ருஷ்ய, பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர்கள் சரஸ்வதியைப் பாராட்டிப் புகழ்வதைக் கண்டு தான் பெருமையடைகிறேன். இந்தப் பெருமையில் எனக்கு மட்டுமா பங்கு? என்னேவிட சரஸ்வதியின் வாழ்விலும் வளத்திலும் அக்கறை காட்டும் உங்களைப்போன்ற வாசகர் களுக்கும் நிறையவே உண்டு.

இப்படிப்பட்ட பாராட்டுதலுக்கும் புகழுக்கும் நாம் எப்படிப் பாத்திரரானுேம்?

கடந்த ஐந்தாண்டுகளாக உங்களுடைய தளராத ஒத்து ழைப்புடனும், விடாமுயற்சியுடனும் நாம் இதுநாள் வரை

138 / சரஸ்வதி காலம் ●

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/144&oldid=561226" இலிருந்து மீள்விக்கப்பட்டது