பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை இலக்கியம் (அழ. வள்ளியப்பா), தமிழில் ஹாஸ் யக் கட்டுரைகள் (மகரம்), பாட்டும் கூத்தும் (சாமி, சிதம்பர ர்ை) சென்னைக்கு வந்தேன் (ந. சிதம்பர சுப்ரமணியம்) ஈழத்து தமிழ் (ச. விசுவநாதன்) ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.

ஒரு நாடகம்: கம்மந்தான் கான்சாகிப், வரலாற்றுச் சித்திரம் ரகுநாதன் எழுதியது. (15 பக்கங்கள்)

சிறு கதைகள் முதல் பகுதியில், ந. பிச்சமூர்த்தி, ஜி. நாக ராஜன், கிருஷ்ணன் நம்பி, எச். எம். பி. மொஹிதீன், கே. டானியல் செ. கணேசலிங்கன் ஆகியோரது கதைகள் இருந்தன.

நாவல்; துணிந்தவன் - வல்லிக்கண்ணன் 50 பக்கங்கள், இந்த நாவல் 1969 -ல் ‘தீபம்’ இரண்டு இதழ்களில், ஹீரோ" என்ற பெயரோடு மறுபிரசுரம் பெற்றது.

கோமதி ஸ்வாமிநாதனின் மன்னிப்பு ஜெயகாந்தனின் 'துரவு’, சுந்தர ராமசாமியின் கிடாரி ஆகியவை சிறுகதை கள் இரண்டாவது பகுதியில் இடம் பெற்றன.

அட்டையில் சாதாரண போட்டோ அட்டை முழுவதும் கூட படம் இல்லை. மேலே சரஸ்வதி - ஆண்டு மலர் 1959, விலே ரூ. 1 என்ற எழுத்துக்கள், சில தென்னை மரங்களின் மேல் பகுதி மேகங்கள் நிறைந்த வானப் பின்னணியில் வெளிர் நீலத்தின் மீது லேட் பிரவுனில் அச்சாகியிருந்தது. எளிமையாகவும் வசீகரமாகவும் அமைந்திருந்தது. இலக்கியப் பிரியர்களின் ஆதரவையும் பாராட்டுதலையும் மிகுதியாகப் பெற்ற கருத்துக் கருவூலம் இம்மலர். -

C

144 / சரஸ்வதி காலம் [...]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/150&oldid=561232" இலிருந்து மீள்விக்கப்பட்டது