பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சிறுமை கண்டு சிற்றம்

ஆண்டு மலர் மிகுந்த கால தாமதத்துடன்தான் வெளியா யிற்று. அடுத்த இதழ் பிப்ரவரி பிற்பகுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் மலர் 6 இதழ் 2 என்று எண்ணிக்கை பெற்ற சரஸ்வதி இதழ் மார்ச் 10-ம்தேதி தான் வந்தது.

இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இலக்கிய வளர்ச்சிக் கும், சிறந்த இலக்கியங்களை ஊக்குவிக்கும் முயற்சிக்கும் உதவி புரியும் வகையில் ஒவ்வொரு ஆண்டிலும் வெளியான சிறந்த நூல்களுக்கு ரூ. 5000 பரிசு அளித்து. ஆதரவுகள் நல்குவது என்ற உயர்ந்த நோக்கத்தோடு, 1954-ல் சாகித்திய அகாடமி தோற்றுவிக்கப்பட்டது. ஆலுைம், ஆரம்பம் முதல் அதன் செயல்கள் அதனுடைய நோக்கத்துக்கும் விதிகளுக் கும் மாறுபட்டதாகவே வருடம் தோறும் இருந்து வருவது கண்டு தமிழ் எழுத்தாளர்கள் அதிருப்தியும் சீற்றமும் கொண்டனர்.

சாகித்ய அகாடமியின் முதல் வருடப் பரிசு, 1955-ல் ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய தமிழின்பம்’ என்ற கட்டுரைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது. 1947முதல் 1955 வரை தமி ழில் வெளிவந்துள்ள நூல்கள் அனேத்திலும் அது தான் தலே சிறந்தது என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அகாடமியின் விதிகளின்படி, குறிப்பிட்ட ஒரு ஆண்டின் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிற புத்தகம், அந்த ஆண்டுக்கு முந்திய மூன்ருண்டுக் காலத்தில் முதல் தடவையாகப் பிரசுரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆளுல், தமிழின்பம் முதல் பதிப்பு 1948-ல் வெளிவந்தது, இரண்டாம் பதிப்பு 1951-ல், மூன்ரும் பதிப்புத் தான் 1954ல் வந்திருந்தது; அதற்குத்தான் பரிசு. அதன் ஆசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளே சாகித்திய அகாட மியின் கமிட்டிகளில் முக்கிய அங்கத்தினராக இருந்ததுதான் அதற்குக் காரணம் ஆகும்.

已 வல்லிக் கண்ணன் ; 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/151&oldid=561233" இலிருந்து மீள்விக்கப்பட்டது