பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டு சந்தாக்கள் எட்டு சேர்த்து ரூ 48 அனுப்புபவர் களுக்கு ரூ. 10 மதிப்புள்ள புத்தகங்கள் அனுப்பி வைக்கப் படும்.

ஆண்டு சந்தா பன்னிரண்டு சேர்த்து ரூ 72 அனுப்புபவர் களுக்கு ரூ. 15 மதிப்புள்ள புத்தகங்கள் அனுப்பப்படும்." பரிசளிக்கப்படும் புத்தகங்கள் பட்டியலும் பிரசுரிக்கப்பட் டிருந்தது. அத்துடன் இன்ைெரு அறிவிப்பும் இருந்தது. "நமது ஏஜண்டுகளில் பலரை ரத்து செய்து புது ஏஜண்டுகளே நிய மிக்க வேண்டியேற்பட்டதால், ஆண்டு மலருக்குப் பிறகு பெப்ரவரி மாதத்தில் இதழை வெளியிட முடியவில்லை. வருந்துகிருேம்” என்பது தான் அது.

இவ்வாறு இதழை வெளியிட முடியாமல் போன சத்தர்ப் பங்கள் இதற்குப் பிறகு அடிக்கடி தலே காட்டின.

மே மாதம் 10 / 25 - 5 - 59 என்று சேர்த்து ஒரே இதழ் தான் வந்தது. அப்புறம் ஜூனில் இதழ் எதுவும் வரவில்லை.

மே இதழிலேயே விஜயபாஸ்கரன் தனது மனச்சோர்வையும் வேதனையையும் திறந்து கொட் டி விட்டார் - தோற்று விட் டோமா?’ என்ற தலைப்புடன்.

‘சரஸ்வதி வரலாற்றில் அது முக்கியமானதொரு தலையங்கம் தான்-- - 'சில நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகாசிரியர், தமிழ் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகையை நடத்தியதே மகத்தான வெற்றியாகும். பிரமாத வசதி படைத்தவர்களே துணிந்து இறங்கத் தயங்கும் ஒரு தொ ழில் ஐந்து ஆண்டுகள் நின்று நிலத்து இன்று சவால் விடக் கூடிய வகையில் முன்னேறியிருப்பதற்கு உங்களுக்கு ஒரு விழாவே நடத்தலாம் என்று சரஸ்வதியைப் பற்றிக் குறிப் பிட்டார்.

ü வல்லிக்கண்ணன் / 159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/165&oldid=561247" இலிருந்து மீள்விக்கப்பட்டது