பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1935 முதல் 1939 முடிய ஐந்து ஆண்டு மலர்கள் இலக்கியப் பொக்கிஷமாக உருவாகியிருந்தபோதிலும், புதுமைப்பித்தன் முழுப்பொறுப்புடன் தயாரித்த 1937-ம் வருஷத் தினமணி' மலர்தான் விசேஷச் சிறப்புடன் விளங்கியது.

‘மணிக்கொடி வெளியீடு என்றும், நவயுகப் பிரசுரம் என்றும், நவயுகப் பிரசுராலயம் லிமிடெட் உயர்ந்த இலக்கியப் புத்த கங்களை வேகமாகவே வெளியிட்டுக் கொண்டிருந்தது. புது மைப்பித்தன் கதைகள் முழுத் தொகுதியாகவும், சிறுசிறு புத்தகங்களாகவும், பு. பி. மொழி பெயர்த்த உலகத்துச் சிறு கதைகள், அவர் எழுதிய பாலிஸ்ட் ஜடாமுனி (முசோ லினி வரலாறு), பு. பி. யும், ந. ராமரத்தினமும் சேர்ந்து எழு திய கப்சிப் தர்யார் (ஹிட்லர் வரலாறு) எல்லாம் ஏறக் குறைய ஒரே சமயத்தில் வெளிவந்தன என்று சொல்லலாம். வ. வெ. சு. ஐயரின் கம்பராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூல் வடிவம் பெற்று வந்தது. வ. ரா. வின் மழையும் புயலும் நடைச் சித்திரம் கட்டுரைத் தொகுதிகளும் இலக் கியப் பிரியர்களுக்குக் கிடைத்தன.

அல்லயன்ஸ் பிரசுரம் தமிழ் நாட்டுச் சிறுகதைகள்’ என்ற வரிசையில் வ. வெ. சு. ஐயர் கதைகள், ராஜாஜி குட்டிக் கதைகள், த. நா. குமாரஸ்வாமியின் கன்யாகுமரி , கு. ப. ராஜகோபாலனின் கனகாம்பரம்’, ந. சிதம்பரசுப்பிரமண்ய னின் சக்கரவாகம் முதலிய சிறுகதைத் தொகுதிகளே வெளி யிட்டது. வங்க, ஹிந்தி நாவல்களின் மொழிபெயர்ப்புக் களையும் பிரசுரித்து வந்தது.

ஆகவே, புதுமை இலக்கியத்தைப் பரிச்சயம் செய்துகொள்ள விரும்பியவர்களுக்கும், எழுத்தாளர்கள் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட இளைஞர்களுக்கும், தமிழ் மறுமலர்ச்சியில் அதுவரை என்ன சாதனைகள் புரியப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்வதற்கு இவை எல்லாம் உதவின.

辽 வல்லிக் கண்ணன் / 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/17&oldid=561097" இலிருந்து மீள்விக்கப்பட்டது