பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேரள முதலமைச்சர் திரு. இ. எம். எஸ். நம்பூதிரிபாத் படம் அட்டையில் இடம் பெற்றது. .

ஜெயகாந்தன் கதை உண்ணுவிரதம்', செ. கணேசலிங்கன் கதை சாயம் --இவை இரண்டு தவிர இதர விஷயங்கள் கட்டுரைகளே. ரகுநாதன் எழுதி வந்த, தமிழ் இலக்கியமும் தத்துவப் போராட்டமும் தொடரின் 11-வது கட்டுரை; சாமி. சிதம்பரளுர் பழம் தமிழ் இலக்கியச் சான்றுகளுடன் எடுத் துக் காட்டிய அறிஞர் தன்மை'; அ. தைரியநாதனின் 'ஒய்வு நேரத்தில்’, எச்செம்பியின் இலங்கைக் கடிதம் ஆகியவற்றுடன் மூன்று புது முயற்சிகள் ஆரம்பித்திருந் தன.

ஒன்று- உலக இலக்கியம் என்ற பொதுத் தலைப்பில், க. நா. சுப்ரமணியம் உலகத்து நாவல்கள் பற்றி அறிமுகப் படுத்த முன் வந்திருந்தார். முதல் நாவல் என்று பலமொழி களில் வந்த ஆரம்பப் படைப்புகள் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, இரண்டாவது பகுதியில் டாஸ்டாவ்ஸ்கி நாவல்களே அறிமுகம் செய்திருந்தார் அவர்.

இரண்டாவது- சென்னைக்கு வந்தேன் கட்டுரைகளைத் தொடர்ந்து, எழுத்தாளர்களின் அனுபவங்களே மேலும் ஒலி பரப்புவதற்கான ஒரு முயற்சி. சென்னைக்கு வந்தேன் பகுதியை நிறுத்திய பின் எழுத்தா ளர்களின் சொந்த அனுபவங்களேயும், தம் எழுத்துக்களைப் பற்றிய சுய விமர்சனங்களையும் படித்து அறிய வாய்ப்புத் தந்த அப்பகுதி தொடர்ந்து வெளிவருதல் வேண்டும் எனப் பல வாசகர்கள் கடிதம் எழுதி இருந்தார்கள். சென்னைக்கு வந்தேன் என்ற தலைப்பில் எல்லோரும் எழுத முடியாது, தம்மை பற்றி எல்லா விஷயங்களேயும் எழுத இயலாது என் பதல்ை, நானும் என் எழுத்தும் என்ற இந்தப் புதிய பகுதி தொடங்கப்பட்டிருக்கிறது என்ற ஆசிரியர் குறிப்புடன் அது தோன்றியது. இப்பகுதியின் முதல் கட்டுரையை நான் தான் எழுதியிருந்தேன். -

164 / சரஸ்வதி காலம் 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/170&oldid=561252" இலிருந்து மீள்விக்கப்பட்டது