பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று மனம் கசந்த அன்பர்களுக்கெல்லாம், சரஸ்வதி நின்று விடுமோ என்று அச்சமுற்ற சகாக்களுக்கெல்லாம் சுருக்கமாக, தெளிவாக, உறுதியாகத் தெரிவித்துக் கொள்ளக் கூடியது இதுதான்:

ஆம், நாம் நிமிர்ந்து விட்டோம்: நிலத்து விட்டோம்.”

நல்ல முறையில் ஒரு லட்சிய இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆசையோடு தான் நண்பர் விஜயபாஸ் கரன் சரஸ்வதியை ஆரம்பித்து, தொடர்ந்து நடத்தி வந்தா ரே தவிர, நாமும் பத்திரிகாசிரியர் என்ற பெயரும் பெருமை யும் அடைய வேண்டும்; அதற்கேற்ற வகையில் ஆபீஸ் கெடுபிடிகள் தோரணைகளோடு ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்று அவர் எண்ணியதேயில்லை. அப்படிப்பட்ட எண்ணத்தோடும் நோக்கத்தோடும் அவர் சரஸ்வதியை நடத்த முற்பட்டிருந்தால், அவர் அதற்காக ஈடுபடுத்திய 'முதல் ஒரு வருடத்துக்குக் கூடக் கண்டிராது.

விஜயபாஸ்கரன் ஆரம்பம் முதலே தனது லட்சியப் பத் திரிகையை குடிசைத் தொழில் ரீதியிலே தான் நடத்தி வந்தார். அதற்கென்று தனி ஆபீஸ் கிடையாது. அவரும் அவர் குடும்பத்தினரும் வசித்து வந்த வீட்டில் ஒரு சிறிய அறைதான் சரஸ்வதி அலுவலகம். அங்கே தான் புத்தகங் களும் பத்திரிகைகளும் சரஸ்வதிக்கான தாள், பிளாக்குகள் வகையராவும், ஆசிரியர் மேஜை நாற்காலி முதலியனவும் நெருக்கிக்கொண்டு காட்சி அளித்தன.

அந்தச் சிறு அறையில் மேலும் நெருக்கடி உண்டாக்கியவாறு தரையில் நீண்டு கிடந்தது ஒரு பெரிய பெட்டி, சாதிக்காப் பலகைப் பெட்டி, அதில், ஸ்டாண்டர்ட் லிட்டரேச்சர் பப்ளிஷிங் கம்பெனி லிமிடெட், பம்பாயிலிருந்து பார்சலில் வந்திருந்த புக் ஆஃப் நாலெட்ஜ் என்ற தடிதடிப் புத்தகங் களின் பத்து வால்யூம்கள் புத்தம் புதுசாக உறங்கிக்கொண் டிருந்தன. நண்பருக்குச் சொந்தமானவைதான்.

168 / சரஸ்வதி காலம் ü

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/174&oldid=561256" இலிருந்து மீள்விக்கப்பட்டது