பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த இதழ் முதல் தமிழ் நாட்டு நாடோடிக் கதை'களை தொகுத்துத் தர கி. ராஜநாராயணன் முன் வந்திருந்தார். நல்ல நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் குழு அமைப்பினுல் எவ்விதமான பயனும் விளையவில்லை" எனினும் இதழ் தோறும் ஆசிரியர் குழு என்ற பெயர்ப் பட்டியல் அச்சிடப்பட்டு வந்தது. சரஸ்வதிக்கென்று சொந்த அச்சகம் அமைத்து, பத்திரிகையின் அளவை மாற்றியதும், பெயரளவில் இருந்து வந்த ஆசிரியர்குழு ஏற்பாடு கைவிடப் பட்டது.

1960ம் ஆண்டில் (சரஸ்வதியின் ஏழாவது ஆண்டு முதல்) சரஸ்வதி சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பத்திரிகையாக மாறியது. விற்பனைக்குப் பிரதி வேண்டு வோர், பிரதி 50. ந. பை. வீதம் கணக்கிட்டு, தங்களுக்குத் தேவையான பிரதிகளுக்கு முன் பணம் அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது சரஸ்வதியின் 1960-ம் ஆண்டுத் திட்டம் பிரமாதமாகத்தா னிருந்தது. இப்படி ஒரு விளம்பரம் பிரசுரமாயிற்று1960 ஆண்டில் சரஸ்வதி தரும் இலக்கிய விருந்து: 12 உலகப் புகழ் பெற்ற நாவல்கள் 72 தலை சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 12 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

12 இலக்கிய விமர்சனங்கள் 12 உலகப் பேரிலக்கிய கர்த்தர்களின் வரலாறுகள். 12 பிற மொழிச் சிறுகதைகள்

1 தொடர் கதை

மற்றும் நூற்றுக் கணக்கான அம்சங்கள், சுமார் 1000 பக்கங் களில் இத்தனை அம்சங்களும் இன்னும் பலவும் 1960 ஆண் டில் சரஸ்வதியில் வெளியாகின்றன. இத்தனைக்கும் ரூ. 6 தான். இன்றே சந்தாதாரராகுங்கள். -

D வல்லிக்கண்ணன் / 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/183&oldid=561265" இலிருந்து மீள்விக்கப்பட்டது