பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைந்திருந்தது. தளவாய் அரியநாயக முதலியார் பற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளே கட்டுரை, (அதுவரை அச்சில் வந்திராதது முதன் முறையாகப் பிரசுரம் பெற்றது), தமிழ கத்து இயக்கங்களும் ஈழத்து அறிஞர்களும், என்ற க. கை லாசபதி கட்டுரை, மெளனி, ஆர். சூடாமணி, எஸ். பொன் னுத்துரை, வ. க. கதைகள்; திருச்சிற்றம்பலக் கவிராயர், முருகையன், கு. சின்னப்பபாரதி கவிதைகள், புத்தக மதிப் புரை ஆகியவை இடம் பெற்றிருந்தன, “பாரதியும் தமிழ் வளமும் என்பது ஆசிரியர் தலையங்கம்.

இந்த இதழ் முதல் சரஸ்வதி மறுபடியும் விலாச மாற்றம் பெற்றது. பைகிராப்ட்ஸ் ரோடில், ராயப்பேட்டை (சென்னே14) உள்ள 393-ம் எண் கட்டிடத்தில் தமிழ்ப்புத்தகாலயத் துடன் ஒட்டுக் குடித்தனம் புகுந்தது அது.

நவம்பர் இதழ் இலங்கை எழுத்தாளர்களின் விசேஷ இத ழாக விளங்கியது. அ. முத்துலிங்கம், எச். எம். பி. முறிை தீன், செ. கணேசலிங்கன், வ. அ. இராசரத்தினம் கதைக ளோடு ரகுநாதனின் சுதர்மம்' எனும் நீண்ட சிறுகதை ஒன்றும், மலாயாத் தமிழ் எழுத்தாளர்கள்’ என்ற கு. அழ கிரிசாமி கட்டுரையும் இதில் வந்தன.

இந்த இதழ் வேலேகளை முடித்து விட்டு, அக்டோபர் இறுதி யில் விஜயபாஸ்கரன் இலங்கைக்குப் பயணமாஞர். சரஸ் வதி டிசம்பர் இதழ் வெளிவரவில்லை.

1960 மார்ச் இதழில் வெளி வந்த புளிய மரம் நாவலின் பிற்பகுதியை சுந்தர ராமசாமி தொடர்ந்து எழுதவேயில்லே. (அப்புறம் பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நாவலை அவர் பூரணமாக எழுதி, புத்தகமாக வெளியிட்டார்.)

விஜயபாஸ்கரன் இலங்கையில் ஐம்பது நாட்கள் தங்கி, பல்வேறு இடங்களுக்கும் சென்று, ஈழத்து எழுத்தாளர்கள் (தமிழ், சிங்களம்) எல்லோரையும் சந்தித்தார். இலங்கையில் நான் இருந்த நாட்கள் எனக்கும் சரி, சரஸ்வதிக்கும் சரி,

瞿 வல்விக் கண்ணன் 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/185&oldid=561267" இலிருந்து மீள்விக்கப்பட்டது