பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக மிகப் பயனுள்ள நாட்கள்’ என்று அவரே திருப்தியுடன் குறிப்பிடும் அளவுக்கு அவரது பயணம் வெற்றிகரமாக இருந் தது. நிதி உதவியும், பலரது ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைக்க வழி ஏற்பட்டது.

இலங்கை எழுத்தாளர்கள் சிலரது துணையுடன் அவர்களது எழுத்துக்களே தமிழ் நாட்டில் புத்தகமாக அச்சிட்டு, இங்கு விற்பனைக்கு ஏற்பாடு செய்வதோடு இலங்கைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடவும் நண்பருக்கு வாய்ப்புக் கிட்டி யது. சரஸ்வதி வெளியீடு என்று புத்தகம் அச்சிடும் முயற்சியில் வி.பா. 1960லேயே ஈடுபட்டார். எச். எம். பி. முஹிதீன் முன்பு சரஸ்வதியில் தொடர்ந்து எழுதி வந்த கார்க்கியைக் கண் டேன்’ கட்டுரை முதலாவது சரஸ்வதி வெளியீடாகத் தயாராயிருந்தது. அடுத்த வெளியீடாக டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் தண்ணிரும் கண்ணிரும் தொகுதியாக உருவாயிற்று. அதன் பிறகு, டாக்டர் நந்தி எழுதிய அருமைத் தங்கைக்கு” (முதன் முதல் தாயாகப் போகும் பெண்ணுக்கு டாக்டரின் அறிவுரை), "இதோபதேசம் (சமஸ்கிருதப் பேரிலக்கியத்தின் தமிழாக்கம்) நவாலியூர் சோ. நடராசா, காவலூர் ராசதுரை யின் சிறு கதைத் தொகுதி குழந்தை ஒரு தெய்வம், எஸ். பொன்னுத்துரை நாவல் "தி ஆகியவை 1961-ல் வெளியிடப்பட்டன. சரஸ்வதி அந்த ஆண்டில் ஆறு இதழ்கள்தான் (ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்) வந்தன. ஜனவரி இதழ் வசீகரமான கலர்ப்பட அட்டையுடன் விளங் கியது. பேராசிரியர் எஸ். வையாபுரிபிள்ளே புதுமைப்பித் தன் பற்றி எழுதி வைத்திருந்த சிறுகட்டுரை முதல் தடவை யாகப் பிரசுரம் பெற்றது. நவாலியூர் சோ. நடராசாவின் கட் டுரை கதை மரபு, நையாண்டி பாரதியின் சுவாரஸ்யமான ‘புதுக்கதை’, கே. டானியலின் நெஞ்சின் வடுக்கள் , ஜி. பி.

180 / சரஸ்வதி காலம் 毽

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/186&oldid=561268" இலிருந்து மீள்விக்கப்பட்டது