பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேகுநாயக்கா சிங்களத்தில் எழுதிய மலர் மாலைகள் என்ற கதையின் தமிழாக்கம் (நா. சுப்ரமணியன்), கிருஷ் ணன் நம்பியின் நீண்ட சிறு கதை ஒரு கனவு’ ஆகிய வற்றுடன் பிச்சமூர்த்தியின் சிறு கதைகள் பற்றி க. நா. சு. எழுதிய விமர்சனமும் இவ்விதழில் இடம் பெற்றிருந்தன.

நல்ல தமிழறிஞரும், சரஸ்வதி'யிடம் மிகுந்த அன்பு கொண் டிருந்த எழுத்தாளரும், எழுத்தாளர்களின் நண்பருமான சாமி. சிதம்பரளுர் 1961 ஜனவரி 7-ம் நாள் மரணமடைந்தார்.

பிப்ரவரி இதழ் அவரது நினவிதழாக வெளியாயிற்று. அட் டையில் சாமி. சிதம்பரளுர் படம். தமிழுக்குப் பெரு நஷ் டம் என்ற தலையங்கம், சிறந்த நண்பர்’ என்று நாரண துரைக்கண்ணன் ஒரு கட்டுரையும், நம் சிதம்பரனுர்’ என்று துலன் கவிதையும் எழுதியிருந்தார்கள்.

இவ் விதழிலும் இலங்கை எழுத்தாளர்களுக்கே அதிக இடம் அளிக்கப்பட்டது. ஏ. ஜே. கனகரட்ணு மெளனி வ்ழிபாடு’ என்ருெரு ஆய்வுரை எழுதியிருந்தார். இலங்கைப் பண்பாட் டில் இந்திய அம்சங்கள்-எஸ். கோகிலம், எஸ். பொன்னுத் துரையின் தொடர் கதை சுவடு, கனக. செந்திநாதன் "ஈழத்து எழுத்தாளர்கள் பற்றி எழுதும் தொடர் கட்டுரை, அ. எஸ். அப்துல்லமது கதை கொழும்புக்கு ஒரு டிக்கட்’ ஆகியவற்றுடன், ஈழத்தைக் கண்டேன்’ என்ற விஜயபாஸ் கரன் கட்டுரையும் அச்சாகியிருந்தன. ஒரு வேசையின் தாலாட்டு’ எனும் ஜெயகாந்தன் கவிதையும், ரகுநாதன் எழுதிய எரிமலை’ என்ற நீண்ட சிறுகதையும் சிறப்பு அம்

也严鼩、

மார்ச், ஏப்ரல் இதழ்கள் வழக்கமான தரத்துடன் அம்சங் களுடனும் இருந்தன. பொன்னுத்துரையின் சுவடு ஏப்ர லில் முடிவுற்றது.

மலர் 8ன் ஐந்தாவது இதழ் ஆகஸ்டில் தான் வந்தது. அருமையான வெள்ளேத்தாளும் அழகான ஆர்ட்பேப்பர் அ.

다. வல்லிக்கண்ணன் , 181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/187&oldid=561269" இலிருந்து மீள்விக்கப்பட்டது