பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டையும் இல்லாது போயின. சாதாக் காகிதம்தான். அட்டை யில் தாகூரின் சிறு அளவுப்படம் அச்சாகியிருந்தது. விஷ யச் சிறப்புக்குக் குறைவில்லை.

அ. திருமலை முத்துசாமி லெனின் பொது நூலகம்' பற்றி எழுதியிருந்தார். இலங்கையர் கோன் கதை மனிதக் குரங்கு, நையாண்டி பாரதியின் சோகத்தின் சிரிப்பு. வேந்தன் கதை மயக்கம்', என். கே. ரகுநாதனின் 'நெருப்பு ஜி. நாகராஜனின் மிஸ் பாக்கியம்’ ஆகியவை இதழுக்குச் சுவையூட்டின. மாதிரிக்குக் கொஞ்சம் ஈழத்து எழுத்தாளர்கள், உதிரிப்பூக்கள், புதிய புத்தகங்கள் (மதிப் புரை) ஆகியவை வழக்கம் போலிருந்தன. பிச்ச மூர்த்தி யின் பதினெட்டாம் பெருக்கு கதைத் தொகுதி பற்றி நகு லன் விமர்சனக் கட்டுரை எழுதியிருந்தார்.

இந்த இதழில் முக்கியமான அறிவிப்பு ஒன்று இருந்தது. "தமிழ் நாவல் இலக்கியத்தில் இது போல் ஒரு நாவல் இது வரை பிறந்ததில்லை எனும் மதிப்பைப் பெறக்கூடிய மகத் தான சிருஷ்டி அடிவானம்'. இது லட்சிய தாகம் கொண்ட தனி மனிதனின் வாழ்க்கைப் போராட்டம் மட்டுமல்ல. அவனே வெகுவாக பாதிக்கும் குடும்பத்தின், சமூகத்தின் கதை மட்டுமல்ல. நாட்டின் அரசியல், கலே, இலக்கியம் பத்திரிகை வியாபாரம் முதலிய சகல துறைகளையும் விசா லப் பார்வையால் தொட முயலும் ஒரு சிந்தனைப் படைப்பு. வல்லிக்கண்ணன் எழுதும் தமிழ் வசன இலக்கியத்தின் தனிப் பெரும் காவியம்! சரஸ்வதி'யில் தொடர்ந்து வெளி வரும். செப்டம்பர் இதழில் ஆரம்பமாகிறது.' அடிவானம் என்கிற மாபெரும் நாவலே நான் அந்த நாட் களில் உற்சாகத்தோடு எழுதிக் கோண்டிருந்தேன். அதை சரஸ்வதியில் வெளியிடலாம் என்று வி, பா. கருதினர். அறிவிப்பும் வந்துவிட்டது. .

ஆனல் அடுத்த இதழ் செப்டம்பரில் வரவில்லை. டிசம்பரில் தான் வந்தது. கிருஷ்ணன் நம்பியின் கணக்கு வாத்தியார்

182 / சரஸ்வதி காலம் 다.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/188&oldid=561270" இலிருந்து மீள்விக்கப்பட்டது