பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. டானியலின் அசை ஆகிய இரண்டு கதைகளோடு, அடிவானம் பெரும்பகுதி இடத்தைப் பிடித்துக் கொண் டது. இந்த இதழின் அட்டையில் படம் கிடையாது; இம் மூன்று விஷயங்களின் வெறும் அறிவிப்பு மட்டுமே அச்சா கியிருந்தது. வழக்கமான அம்சங்களும் இருந்தன. 36 பக்கங் 邸6煎”。

சரஸ்வதி அடுத்த இதழிலிருந்து புதிய தோற்றத்தில் வெளி வரும். கையடக்கமாக புத்தக அளவில் இனிமேல் சரஸ்வதி வரும். விலையும் குறைக்கப்படுகிறது. விலை 25 காசு தான். விலை குறைப்பதையொட்டி சந்த விகிதத்தில் மாறுதல் செய்திருக்கிருேம், ஏற்கனவே சந்தாதாரராக இருப்பவர் களுக்கு புதிய சந்தா விகிதத்தின்படி கணக்கிடப்பட்டு சத் தாக் காலத்தை நீடித்திருக்கிருேம். எந்த இதழுடன் சந்தன் முடிகிறது என்ற விவரம் ஜனவரி இதழுடன் தெரிவிக்கப் படும், என்றும் அறிவிக்கப்பட்டது.

உண்மையில், பெரும்பாலான சரஸ்வதி வாசகர்களோப் பொறுத்தவரை, இதுதான் கடைசி இதழ் ஆகும். இதற்குப் பிறகு, புத்தக வடிவில் - சிறிய சைஸில், துண்டுப் பிரசுரம் போல், அந்தக் காலத்து ஆயுர் வேதவைத்தியசாலை களின் மருந்து காட்லாக் மாதிரி - வெவ்வேறு காலங்களில் நான்கு இதழ்கள் வந்துள்ள விஷயமே ரொம்ப பேருக்குத் தெரியாது. பிற்காலத்தில் நான் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் இலக் கியப் பிரியர்களின் அன்பான அழைப்பை ஏற்றுச் செல்ல நேர்ந்த சமயங்களில், பலரும் சரஸ்வதி பற்றி ரசனே போடு உரையாடினர்கள். சிறிய அளவு சரஸ்வதியைப் பார்த்ததேயில்லே என்று குறிப்பிட்டார்கள். சமீப நாட்களில் கூட எங்காவது ஒரு ஊரில் ரசிகர்களின் இந்த வியப்புச் சொல்லே நான் எதிர்கொள்ள நேரிடுகிறது. சரஸ்வதி யின் நீண்டகால சந்தாதாரர்களுக்கு மட்டுமே புது உருவ இதழ் கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் என்று நான் புரிந்து கொன்.ே ஒன்.

O

C வல்லிக் கண்ணன் 3ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/189&oldid=561272" இலிருந்து மீள்விக்கப்பட்டது