பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்ை, பத்திரிகை உலக சம்பிரதாயங்களே அலாதி.

யுத்த பீதி, காகிதப் பஞ்சம், கட்டுப்பாடு இந்த நெருக்கடி களுக்கு இடையில் இன்னுமொரு பத்திரிகையா என்ற திர்த் தாகூடிண்யமான கேள்வி நிச்சியமாகப் பிறக்கும்.

அதற்குப் பதில் இது:

இந்தத் தமிழ் நாட்டில் எத்தனை காலம் வாழ முடியுமோ அத்தனை காலம் வாழ்ந்து, தமிழ் பாஷையின் புனருஜ்ஜீவனம் என்ற சேதுபந்தனத்திற்கு இந்த அணிலும் தன்னுலான சே வையைச் செய்யவேண்டுமென்றே கலாமோகினி பிறந்துள் ளது.”

இப்படி எதையும் புதுமையாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த வி. ரா. ராஜகோபாலன், சாலிவாஹ னன், விக்ரமாதித்தன் என்ற புனைபெயர்களையும் தனக்கு வைத்துக் கொண்டார். புதியதொரு சகாப்தத்தின் தலைவனுக விளங்கிய சாலிவாஹனன் போலவும், வரலாற்றில் பொற்காலம் படைத்த மாமன்னன் விக்ரமாதித்தன் போலவும், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியில் அற்புதங்கள் சாதிக்க வேண்டும் எனும் லட்சியக் கனவோடு தான் நண்பர் தனக்கு இப் பெயர்களைச் சூடிக்கொண்டார் போலும்!

மணிக்கொடி எழுத்தாளர்களில் ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோ ரின் பரிபூரண ஆதரவும் ஒத்துழைப்பும் ஆரம்பம் முதலே அவருக்குக் கிட்டியிருந்தன. மற்றும் லட்சியக் கனவு கண்ட இளைய தமிழர்கள் பலரது உற்சாகமான ஒத்துழைப்பும் கலாமோகினி"க்கு என்றும் கிடைத்துக் கொண்டிருந்தது.

அதன் முதல் இதழ் அட்டையில் ந. பிச்சமூர்த்தியின் படம் வெளியாயிற்று. இரண்டாவது இதழில் கு. ப. ரா., மூன்ரு வது இதழ் அட்டைப்படம் சிட்டி, இவ்வாறு இதழ்தோறும் ஒரு எழுத்தாளர் படத்தை அட்டையில் பிரசுரித்து, இவர்

D வல்லிக் கண்ணன் / 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/19&oldid=561099" இலிருந்து மீள்விக்கப்பட்டது