பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. ரா. ராஜகோபாலன் நல்ல கவிஞர். கதைகளும் நாடக மும் எழுதும் ஆற்றல் உடையவர். பழம் தமிழ் இலக்கிய ஞானம் பெற்றிருந்தவர். மணிமேகலையின் கதையை சுய சரிதையாக, மணிமேகலையே கூறுவது போல் உரை நடையில் தொடர்ந்து எழுதிவந்த அவர், ஒவ்வொரு இதழிலும் சங்க இலக்கியத்திலிருந்து என்று, பாடல்களின் பொருளே வசனப் படுத்தியும் கொடுத்து வந்தார். லட்சிய வேகம் பெற்றிருந்த நண்பர், தமக்குக் குற்றம் என்று தோன்றியதை. அது எவர் செய்ததாக இருந்தாலும்- அஞ்சாது கண்டிக்கும் மெய்த் துணிவும் பெற்றிருந்தார். அவரது இந்தப் பண்பை கலா மோகினி அடிக்கடி எடுத்துக் காட்டியது.

அந்நாட்களில், ரசிகமணி டி. கே. சி. அவர்கள் கம்பன் பாடல்களேத் திருத்தி பத்திரிகைகளில் வெளியிட்டு வந்த போதும், திருத்தம் பெற்ற பாடல்களே கம்பர் தரும் ராமா யணம்’ என்று புத்தகமாகப் பிரசுரித்த போதும், ஆதரவும் வரவேற்பும் இருந்ததுபோலவே, எதிர்ப்பும் கண்டனங்களும் கிளம்பிக் கொண்டிருந்தன. டி. கே. சி. அவர்களின் செயலே ‘சாலிவாஹனனும் எதிர்த்துக் கண்டித்தார்.

‘சாலிவாஹனன் எழுத்தில் உண்மையின் வேகத்தோடு பரி காசமும், நளினமான நகைச் சுவையும் கலந்து மிளிரும். அத் தன்மையிலே ஐந்தாம் படை ரசிகர்கள் என்று ஒரு கட்டுரை எழுதினர் அவர்.

‘ஐந்தாம்படை வேலை என்பது யுத்தகாலத்தில் வழக்கில் அடிபட்ட ஒரு சொல்.

ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு உதவி செய்பவர்களைப் போல் நடித்துக்கொண்டு அதே காரியத்திற்குப் பாதகமான செயல் களேச் செய்வதைத்தான் ஐந்தாம்படை வேலை என்கிருேம். இப்போது’ என்று கட்டுரையை ஆரம்பித்து, டி. கே. சி. அவர்களும், அவர்களது ரசிகர்களும் செய்து வருவது இலக்

ü வல்விக்கண்ணன் / 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/21&oldid=561101" இலிருந்து மீள்விக்கப்பட்டது