பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி மகிழ்ச்சியுடன் செய்தது. அவற்றில் மதிப்புரை மறுப்பு தனிச் சிறப்பு உடையது. அதன் தனித் தன்மை கருதி, அச்சிறுகட்டுரையை அப்படியே இங்கு தருகிறேன்:

"பழந்தமிழ் நூல்களே நம் மக்கள் விரும்பிப் பயில வேண்டு மென்ற நோக்கத்’தை சாக்கிட்டு வேசித்தனத்தையும், சதை வெறியையும் பரப்பும் நூல்களே இலக்கியம் என்ற பேரால் வெளியிட்டு, மக்களின் ருசியையும் வாழ்வையும் மிருக பிராயமாக்கத் துணிந்துள்ளார்கள் சிலர். போதாக் குறைக்கு இந்த நாற்றச் சரக்குக்கு மதிப்புரை கூறும்படி வேறு அனுப்பி விட்டார்கள். அந்த ரசிகசிகாமணிகள். இந்தக் காமக் கிரீ டத்தை கலாமோகினிக்கு அனுப்பத் துணிந்த அவர்கள் பேதமையை மன்னித்து இனி இம் மாதிரி குப்பைகளே அனுப்பாதிருக்கும்படி எச்சரித்து, கீழ்க்கண்ட விநயமான பிரார்த்தனையுடன் அந்தக் கிரீடத்தை அந்த ரசிகமணிகளுக் கே திரும்ப அனுப்புகிருேம். .

அதயத் தனத்தை அதி உன்னத அளவில் ஆஸ்ரயிக்கும் அதிமேதைகளே! உங்களுக்கேதாவது மரியாதை யிருந்தால், பெண்மையின் மானத்தில் உங்களுக்கேதாவது நம்பிக்கை இருந்தால், தமிழ் ஜாதியின் மகோன்னதத் தன்மையில் உங் களுக்கேதாவது மதிப்பிருந்தால், நமது கலேப் பண்பின் புனிதத்திற்கு உங்களிடம் ஏதாவது கருணையிருந்தால், காலம் கண்ட நமது தமிழ் மரபுகளுக்கு கொஞ்சம் நஞ்சம் மதிப்பு நீங்கள் அளிப்பதாயிருந்தால், நமது இலக்கிய அபி விருத்திக்கு உழைக்கவேண்டு மென்ற ஆசை தினத்துணை யாவது உங்களுக்கு இருந்தால் நமது தாய்மையைக் கெளர விக்க வேண்டுமென்ற கடுகளவு வேட்கை உங்களுக்கிருக்கு மானுல், தமிழ் இலக்கியம், தமிழ் மரபு, தமிழ் மனப் பண்பு தமிழ்க் கலையின் அதிதேவதை ஆகியவற்றின் மேல் ஆணே யிட்டுச் சொல்கிருேம்

இந்த ஆபாசம் மலிந்ததும், பேய் பலத்தோடு சதை வெறியை

18 / சரஸ்வதி காலம் [

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/24&oldid=561104" இலிருந்து மீள்விக்கப்பட்டது