பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாமோகினி பிச்சமூர்த்தி கதைகளைத் தொகுத்து, 'ஹிமாலயப் பிரசுரம்' என்ற முத்திரையில், பதினெட்டாம் பெருக்கு’ எனும் புத்தகத்தை வெளியிட்டது. ஊழியன்’ மறுமலர்ச்சி நிலையம் என்ற பெயரோடு, கு. ப. ரா. எழுத்துக் களையும், பிச்சமூர்த்தியின் மன நிழல் கட்டுரைகளேயும் புத்தகங்களாகப் பிரசுரிக்கத் திட்டமிட்டது. ஆளுல் அது காரியசித்தி ஆக வில்லை.

ந. பி. எழுதி வந்த "மனநிழல் தனிரகம் ஆன இலக்கியப் படைப்பு ஆகும்.

கு. ப. ரா. 'ஊழியன் மூலம் எழுத்து ஆற்றல் மிகுந்த இளைஞர்களையும், ஒவியத் திறமை பெற்ற இளம் கலைஞர் களேயும் அறிமுகப்படுத்தி வைத்தார். எழுத்தாளர்களில் தி. ஜானகிராமன், கி. ரா. கோபாலன் முக்கியமானவர்கள். கோபுலு என்று பின்னர் பிரசித்தி பெற இருந்த கோபாலன் ஓவியர்களில் முக்கியமானவர்.

கு. ப. ரா. கிராம ஊழியன் மூலம் அதிகமான சாதனைகள் புரிந்திருக்கக் கூடும், அவர் அற்பாயுளில் மரணம் அடையா மல் இருந்திருப்பின். 1944 ஏப்ரல் இறுதியில்-ஊழியனின் 17-வது இதழ் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் - அவர் அமரர் ஆனர்.

மார்ச் மாத இறுதியில், ஊேழியன் பணிபுரியக் காலம் என் னைத் துறையூர் கொண்டு சேர்த்திருந்தது.

இந்த இடத்தில் எனது சுயபுராணத்தைச் சிறிது கூற வேண் டியது அவசியமாகிறது.

எழுத்தாளன் ஆக வளர நான் ஆசைப்பட்டேன். அதஞல், நான்கு வருடங்களாகப் பணி ஆற்றிய சர்க்கார் விவசாய டிமான்ஸ்டிரேட்டர் ஆபீஸ் குமாஸ்தா வேலையைத் துறந்து விட்டு, வீட்டிலிருந்தவாறு எழுதிக் கொண்டிருந்தேன். மேலும்

口 வல்லிக்கண்ணன் / 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/31&oldid=561111" இலிருந்து மீள்விக்கப்பட்டது