பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்த ஊழியன் எப்போதும் கவிதைக்கு முக்கியத் துவம் அளித்து வந்தது.

புதுமைப்பித்தன், வேளுர் வெ. கந்தசாமி பிள்ளை என அவ தாரம் பூண்டு கவிதை எழுதத் தொடங்கியதும் இந்தக் காலத்தில்தான். அவரது முதல் கவிதை கடவுளுக்குக் கண்ணுண்டு’, ‘கிராம ஊழியன் பொங்கல் மலரில் பிரசுர மாயிற்று இரண்டாவது கவிதை ஓடாதீர்!’ என்பது ஆண்டு மலரில் வெளியாயிற்று.

அதற்கு பதில் கவிதை ஒன்று, மளிகை மாணிக்கம் செட்டியார் பாடுகிருர் என்று, ஓடும் ஒய்!” எனும் தலைப்பில் *கலாமோகினி'யில் வந்தது.

"எழுத்துத் தொழிலல்ல ஏமாற்றம் தருவதது பசி வெள்ளம்

அனேபோட

பாட்டி கதை

உதவாது, விட்டொழியும் இதையெல்லாம்,

உலகில் தொழிலுண்டு

உய்யவழி பலவுண்டு

பசிக்குணவு வேண்டுமென்ருல்

பழங்கதையை விட்டுவிடும்’

என்றெல்லாம் செட்டியார் உபதேசித்திருந்தார். ஒடும் ஒய் உம்மால் ஒரு மண்ணும் ஆகாது’ என்று புத்தி சொல்ல வந்த வித்தகருக்கு விருப்புத் தார்க்குச்சி ஆக வேளுர் பிள்ளைவாள் ஒரு கவிதை எழுதினர். உருக்க முள்ள வித்தகரே! என்ற அது ஊழியன் இதழில் பிரசுரமாயிற்று.

யோக்கியமாய்

彗 வல்லிக் கண்ணன் , 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/35&oldid=561115" இலிருந்து மீள்விக்கப்பட்டது