பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந. பிச்சமூர்த்தி யாப்பில்லாக் கவிதை எழுதி வந்தார். அவருக்கு இலக்கணம் தெரியாது; அதனுல்தான் இப்படி எழுதுகிருர் என்று பலரும் குறை கூறியும் பரிகசித்தும் வந்தனர். அவர் இலக்கணம் கற்றுத் தேர்ந்து, இலக்கணம் பிறழாத முறையில் கவிதைகளே நிறையவே எழுதலானர். அவை யாவும் ஊழியனில் தான் பிரசுரமாயின.

கவிஞர் கலைவாணன் அற்புத கவிதைகள் எழுதி உதவிக் கொண்டிருந்தார். இலங்கை (ஈழத்துக் கவிஞர்கள் நாவ்ற் குழியூர் நடராஜன், மகாகவி (பண்டிதர்), க. இ. சரவ்ண முத்து ஆகியோரும் கவிதைகள் எழுதி வந்தார்கள்.

இலக்கியத் தரம் மிகுந்த மலர் ஒன்று உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு ஆண்டு மலர் தயாரித்தோம். அதில் கவிதைப் பகுதி மிகச் சிறப்பாக அமைந்தது. பாரதிக்குப் பின் வந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் அனைவரும் (பாரதிதாசன், ச. து. சு. யோகியார், தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, சுத்தானந்த பாரதி,) கவிதை உதவினர். பிச்சமூர்த்தியின் மாகவிகள்’ என்ற நெடுங் கவி தையும், கலேவாணன் எழுதிய ஊர்வசி, கம்பதாசனின் "இரத்த ஓவியம் ஆகிய குறுங் காவியங்களும், வ்ேளுர் வெ. கந்தசாமி பிள்ளையின் ஓடாதீர்!’ கவிதையும் மலருக்கு மதிப்பளித்தன.

‘மணிக்கொடி எழுத்தாளர்களில் பலரும், பின் வந்த எழுத் தாளர்கள் அநேகரும் கதைகள், கட்டுரைகள் எழுதி யிருந்தார்கள்.

இம்மலரின் மற்ருெரு சிறப்பு, அது தமிழகத்துக்கும் இலங் கைக்குமிடையே அமைக்கப்பட்ட ஒரு இலக்கியப் பாலம்’

ஆக விளங்கியது.

இலங்கை எழுத்தாளர்கள் சி. வ்ைத்தியலிங்கம், இலங்கையர் கோன், அம்பிகைபாகன், சோ. தியாகராஜன், ராஜ. அரிய

鳕 வல்லிக் கண்ணன் , 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/37&oldid=561117" இலிருந்து மீள்விக்கப்பட்டது